முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்த பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செய்திகள் வந்த வண்ணமே இருந்தது. திடீரென்று ஒரு நாள் ட்விட்டர் நிறுவனத்தை அதிக விலை கொடுத்து வாங்கப் போவதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதை தொடங்கி ட்விட்டருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து, பின்னர் அதில் குழப்பத்தை உருவாக்கி ஒரு வழியாக சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரை வாங்கினார் எலான் மஸ்க்.
அதன் பின்னர், சிஇஓ தொடங்கி பல ஊழியர்களை வேலையை விட்டு வெளியேற்றிய மஸ்க் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துக்கணிப்பு கேட்டு ட்விட்டரில் Poll நடத்தி வருகிறார். அப்படித்தான் டிசம்பர் 19ஆம் தேதி எலான் மஸ்க் "ட்விட்டரின் தலைவர் பதவியிலிருந்துதான் விலக வேண்டுமா" என கருத்துகணிப்பு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் நடத்திய ட்விட்டர் கருத்துக்கணிப்பில், 57.5 சதவீதத்தினர் எலான் மஸ்க் பதவி விலகவேண்டும் என தெரிவித்திருந்தனர். 42.5 சதவீதத்தினர் பதவி விலக வேண்டாம் என தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: கல்யாணத்துக்கு போற மாதிரி டிரெஸ் போடுறாங்க.. இதெல்லாம் ஒத்துவராது - பெண்களுக்கான உயர்கல்வி தடை குறித்து தாலிபான் விளக்கம்
பதவி விலகுங்கள் என பெரும்பான்மை மக்கள் கூறிய நிலையில், இந்த சிஇஓ பதவிக்கு ஏற்ற ஒரு முட்டாளை இந்த வேலையில் நான் பணியமர்த்திய பிறகு, நீங்கள் சொன்னது போல சிஇஓ பதவியிலிருந்து நான் விலகுகிறேன். அதற்கு பிறகு நான் வெறும் தொழில்நுட்ப பணிகளில் மட்டும் ஈடுபட உள்ளேன்” என்று எலான் கூறினார். எலான் இவ்வாறு கூறியதில் இருந்து பலரும் அவரை டேக் செய்து நாங்கள் சிஇஓ பதவிக்கு வரலாமா, விண்ணப்பிக்கலாமா என கேட்டு வருகின்றனர்.
It’s not out of the question
— Elon Musk (@elonmusk) December 22, 2022
அந்த வகையில் உலகின் முன்னணி யூடியூபரான MrBeast " நான் ட்விட்டரின் புதிய சிஇஓவாக பதவிக்கு வரலாமா என்று ட்வீட் செய்து கேள்வி எழுப்பினார். இதற்கு எலான் மஸ்க்கும் பதில் அளித்துள்ளார். "நீங்கள் சிஇஓவாக வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன சாத்தியமில்லாமல் இல்லை" என்ற அர்த்தத்தில் எலான் பதில் கூறியுள்ளார். எலான் மஸ்க் எது பேசினாலும் ஜாலிக்கு சொல்கிறாரா அல்லது சீரியசாக சொல்கிறாரா என்று பலராலும் கணிக்க முடியவில்லை. காரணம் அவ்வாறு திடீர் அதிரடிகளை செய்து காட்டுபவராகவே எலான் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.