டென்மார்க்கில் உலகின் மிக உயரமான மணல் கோட்டை - 4,860 டன் மணலால் வடிவமைப்பு!

மணல் கோட்டை

குளிர்காலத்தின் குளிர்ந்த மற்றும் காற்று வீசும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  டென்மார்க்கில் உள்ள ஒரு மணல் கோட்டை உலகின் மிக உயரமான கோட்டை என்ற பெயரில் புதிய கின்னஸ் உலக சாதனையில் நுழைந்துள்ளது.

  டென்மார்க்கில் உள்ள ஒரு சிறிய கடலோர நகரமான ப்ளொகஸ் நகரில் உலகில் மிக உயரமான முக்கோண வடிவ மணல் கோட்டை கட்டப்பட்டுள்ளது. உலகின் சிறந்த மணல் சிற்பிகளில் ஒருவரான டச்சு படைப்பாளரான வில்பிரட் ஸ்டிஜர் 21.16 மீட்டர் (69.4 அடி) உயரத்தில் 4,860 டன் மணலால் நுட்பமாக இந்த கோட்டையை வடிவமைத்துள்ளார். இந்த புதிய கட்டமைப்பு ஒரு பிரமிட்டை நினைவூட்டுகிறது.

  Also Read: Sirisha Bandla: விண்வெளியிலிருந்து பூமியை பார்த்தது நம்பமுடியாத அனுபவம்: விண்வெளி வீராங்கனை ஸ்ரீஷா பாண்ட்லா

  முன்னதாக 2019ஆம் ஆண்டில் ஜெர்மனியில் கட்டப்பட்டுள்ள 17.66 மீட்டர் அளவிலான மணல் கோட்டை உலகில் பெரிய மணல் கோட்டையாக சாதனை பெற்றிருந்த நிலையில், அந்த சாதனையை தற்போது டென்மார்க்கில் கட்டப்பட்டுள்ள இந்த மணல் கோட்டை முடியடித்துள்ளது. டென்மார்க் கோட்டை அதனை விட 3.5 மீ உயரம் கொண்டுள்ளது. இதன் மூலம் உலகில் மிக உயரமான மணல் கோட்டை என்ற சாதனையை டென்மார்க்கில் மணல் கோட்டை பெற்றுள்ளது. இந்த கோட்டையை கட்டமைக்க வில்பிரட் ஸ்டிஜர்விற்கு 30 பேர் உதவியுள்ளார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து உலகம் முழுவதும் பரவலை குறிக்கும் வகையில் மணல் கோட்டையின் மேல் கிரீடம் அணிந்த வைரஸின் மாதிரி இந்த கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எல்லா இடங்களிலும் நமது வாழ்க்கையை ஆளுகிறது, இது என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது என்றால் உங்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருங்கள் என குறிப்பதாக வில்பிரட் ஸ்டிஜர் தெரிவிக்கிறார். இந்த மணல் கோட்டை உலக கின்னஸ் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

  Also Read:  சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புகிறேன் - ‘ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டார்’ ஜாக்கி சான்

  மேலும் இந்த சிற்பம் கட்டமைத்த மணலில் சுமார் 10 சதவீத களிமண் உள்ளதாகவும், இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தின் குளிர்ந்த மற்றும் காற்று வீசும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு கட்டமைப்பு பணிகள் முடிந்தபின் ஒருவித பசை மேற்புறத்தில் ஒரு அடுக்காக பூசப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

  கடற்கரை வீடுகள், மீன் மற்றும் கலங்கரை விளக்கங்கள் போன்ற மணல் கோட்டையில் உள்ளூர் அம்சங்கள் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ப்ளோகஸின் குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அடுத்த பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கடுமையான உறைபனி காலம் வரை இந்த கோட்டை நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதுவரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: