காலமானார் உலகின் வயதான மனிதர் சிடேட்சு..!

காலமானார் உலகின் வயதான மனிதர் சிடேட்சு..!
உலகின் மிக வயதான மனிதர் சிடேட்சு
  • News18 Tamil
  • Last Updated: February 26, 2020, 11:11 AM IST
  • Share this:
உலகின் மிகவும் வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்த ஜப்பானைச் சேர்ந்த சிடேட்சு வடானபி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

ஜப்பானில் 1907-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நீகாடா நகரில் பிறந்த சிடேட்சு, 18 ஆண்டுகள் தைவானில் பணியாற்றி அங்கேயே மிட்சூ என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஐந்து பேருக்குத் தந்தையான இவர் இரண்டாம் உலகப் போருக்கு பின் நீகாடாவிற்கு திரும்பினார். 10 ஆண்டுகளுக்கு முன் வரை போன்சாய் என்ற ஜப்பானிய பாரம்பரிய மரம் வளர்ப்புக் கலையை செய்துவந்தார்.

112 வயதான இவர் இரண்டு வாரங்களுக்கு முன் உலகில் வாழும் வயதான ஆண் என்ற கின்னஸ் சாதனை படைத்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட சிடேட்சு, நேற்று காலமானதாக அவரது உறவினர்கள் அறிவித்தனர். 
First published: February 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading