58 லட்சத்துக்கு ஏலம் போன உலகின் மிகப் பழமையான ஃபுட்பால் ரூல் புத்தகம்!

ரேவ் க்ரேவில் ஜான் செஸ்டர், என்ற மதகுரு ஒருவர் தொகுத்த விக்டோரியன் ஸ்கரப்புக் ஒன்று சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த பிரசுரத்தில் வில்லியம் பேக்கர் பென்சிலால் கையெழுத்திட்டுள்ளார்.

ரேவ் க்ரேவில் ஜான் செஸ்டர், என்ற மதகுரு ஒருவர் தொகுத்த விக்டோரியன் ஸ்கரப்புக் ஒன்று சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த பிரசுரத்தில் வில்லியம் பேக்கர் பென்சிலால் கையெழுத்திட்டுள்ளார்.

  • Share this:
அமெரிக்காவை சேர்ந்த சோதேபிஸ் என்பவர் பழமையான கலைப்பொருட்கள் சேகரிப்பாளர். சமீபத்தில், இவர் உலகின் மிகவும் பழமையான கால்பந்து விதி புத்தகம் ஒன்றை, 57,000 பவுண்டுக்கு ஏலத்தில் விடுத்தார். இந்திய ரூபாயின் மதிப்பில் இதன் விலை கிட்டத்தட்ட 58 லட்ச ரூபாய். இந்த ஏலம், சோதேபிஸின் இணையதளத்தின் வழியே நடத்தப்பட்டது. இந்த பழமையான புத்தகத்தின் மதிப்பு அதன் வரலாற்று முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், விளையாட்டின் வளர்சிக்கு எப்படி பங்களித்துள்ளது என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Also Read | திருநம்பி, திருநங்கைகளுக்காக தமிழகத்தின் முதல் கட்டணமில்லா விடுதி! குவியும் பாராட்டு

ரேவ் க்ரேவில் ஜான் செஸ்டர், என்ற மதகுரு ஒருவர் தொகுத்த விக்டோரியன் ஸ்கரப்புக் ஒன்று சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த பிரசுரத்தில் வில்லியம் பேக்கர் பென்சிலால் கையெழுத்திட்டுள்ளார். கமிட்டியின் ஒரு உறுப்பினராக இருந்த இவர், அக்டோபர் 21, 1858 ஆம் ஆண்டு, இந்த விதிகளுக்கு ஒப்புதலளித்து கையெழுத்திட்டார். ஷெஃபீல்ட் கால்பந்து கிளப் நடத்திய தொடர் கூட்டங்களின், கைகளால் எழுதி தொகுக்கப்பட்ட புத்தகம், 1859 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

ஷெஃபீல்ட் கால்பந்து கிளப் 1857 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சர்வேதச கால்பந்தாட்ட கூட்டமைப்பு, FIFA கருத்து படி, இந்த கிளப் தான் உலகின் மிகப் பழமையான கால்பந்தாட்ட கிளப். கால்பந்து விளையாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில், இந்த கிளப் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. மேலும், கார்னர் கிக், இன்டைரக்ட் ஃப்ரீ-கிக் போன்ற செட்-பீசஸ்களையும் விளையாட்டில் இந்த கிளப் தான் அறிமுகப்படுத்தியது.

Also Read | “இயற்கையை நேசித்தவர் இயற்கை சீற்றத்தால் உயிரிழந்த பரிதாபம்”- 9 பேரின் உயிரை பறித்த திடீர் நிலச்சரிவு!

இந்த விதி புத்தகம் உருவான ஷெஃபீல்ட் கால்பந்து கிளப்பிடம், அதன் இன்னொரு அச்சு இருந்தது. அதன் வரலாற்று மதிப்பும், விளையாட்டின் வளர்ச்சியில் அதன் பங்கும், அதன் மதிப்பை உயர்த்தியது. இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய்க்கு 2011ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. அந்த காலகட்டத்தில், இது மிகப்பெரிய நினைவுச்சின்னமாகும். தற்போது, மிச்சமிருக்கும் ஒரே ஒரு புத்தகம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏலம் விடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புத்தகம் மற்றும் கையெழுத்துப் பிரதி நிபுணரான சோதேபஸ், தி ஸ்டாருக்கு பேட்டி அளித்தார். “இந்த அற்புதமான புத்தகம், அழகான இந்த விளையாட்டின் ஆரம்ப நாட்களுக்கு கொண்டு சென்றது. அதாவது, கிட்டத்தட்ட 160 ஆண்டுகளுக்கு முன்  கையால் எழுதப்பட்ட குறிப்புகள் கால்பந்து விளையாட்டு எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் பற்றி இந்த புத்தகத்தின் மூலம் அறியலாம். இன்று நாம் அறிந்திருக்கும் நவீன கால்பந்து விதிமுறைகள் மற்றும் பழக்கங்களின் தொடக்கம், இந்த புத்தகத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
Published by:Archana R
First published: