உலகின் மிக நீளமான தொங்கும் நடைபாலம் செக் குடியரசு நாட்டின் மவுன்டெய்ன் ரிசார்ட் என்ற இடத்தில் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,100 மீட்டர், அதாவது, 3 ஆயிரத்து 610 அடி உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் 721 மீட்டர்(2,365 அடி). இந்த பாலத்திற்கு ஸ்கை பிரிட்ஜ் 721 (Sky Bridge 721) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முதல் இரு வாரத்தில் சோதனைக்காக 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், காற்றின் வேகம் 135 கிமீஐ தாண்டும் பட்சத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பாலம் மூடப்படும். இந்த பாலத்தை இரண்டு ஆண்டுகளில் செக் குடியரசு கட்டி முடித்துள்ளது. இதற்கான செலவு 8.3 மில்லியன் டாலராக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கான நுழைவு கட்டணம் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ.1,100 ஆகும்.
இந்த பாலம் மூலம் அந்நாட்டின் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, உயரத்தை கண்டு அஞ்சுபவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.இந்த பாலம் போலாந்து நாட்டின் எல்லைக்கு அருகே உள்ளதால், அந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளும் இந்த பாலத்தை காண வருவார்கள்.
இதையும் படிங்க: ஆண்களின் வழுக்கை தலையை கேலி செய்வது பாலியல் குற்றம்
இந்த பாலத்திற்கு முன்னர் நேபாள நாட்டின் கண்டகி நதியில் உள்ள 567 மீட்டர் தொங்கும் பாலமே நீளமான தொங்கும் பாலம் என்ற சாதனையை வைத்திருந்தது. இந்த பாலத்தின் கட்டுமானத்திற்கு சூழியல் ஆர்வளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதேவேளை, இந்த பாலத்தின் கட்டுமானத்தில் விதிமுறைகள் ஏதும் மீறப்படவில்லை எனவும், சுற்றுலாவை ஊக்குவிக்கவே இந்த பாலம் கட்டப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.