சீனாவில் பயன்பாட்டுக்கு வந்த உலகின் நீளமான 'சாலை - ரயில்' பாலம்

சீனாவில் உலகின் நீளமான சாலை - ரயில் வடம் தாங்கிப் பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சீனாவில் பயன்பாட்டுக்கு வந்த உலகின் நீளமான 'சாலை - ரயில்' பாலம்
சீனாவில் உலகின் நீளமான சாலை - ரயில் வடம் தாங்கிப் பாலம்.
  • Share this:
உலகின் மிக நீளமான சாலை- ரயில் வடம் தாங்கிப் பாலம் (Road - Rail Cable stayed bridge) சீனாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இத்தகைய பாலங்களின் அடிப்பகுதி தூண்களோடு இணைக்கப்பட்ட கேபிள்களால் தாங்கப்படுகிறது.

இந்தப் பாலத்தின் மேற்பகுதியில் ஆறு வழி சாலைப் போக்குவரத்தும், கீழ் பகுதியில் நான்கு வழி ரயில் போக்குவரத்தும் நடைபெறும் வகையில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also see: 

யாங்ஸே நதியின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் நான்டாங் (Nantong) மற்றும் ஸான்ஜியாகாங் (Zhangjiagang) நகரங்களை இணைக்கிறது. கடுமையான புயலின் தாக்குதல் மற்றும் ஒரு லட்சம் டன் எடையுள்ள கப்பலின் மோதலையும் தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் இரு தூண்களுக்கு இடையேயான இடைவெளி 1092 மீட்டர் என்பதால், இடைவெளி 1000 மீட்டருக்கும் அதிகமான உலகின் முதல் சாலை - ரயில் பாலம் என்ற பெருமையைப் பெறுகிறது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading