முகப்பு /செய்தி /உலகம் / 46 அடி உயரம்… 1,500 மீன்கள்… திடீரென வெடித்த உலகின் மிகப்பெரிய உருளை அக்வாரியம்!

46 அடி உயரம்… 1,500 மீன்கள்… திடீரென வெடித்த உலகின் மிகப்பெரிய உருளை அக்வாரியம்!

உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி

உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி

‘சீ லைஃப் பெர்லின்’-ஐ பொறுத்தவரை, இந்த உருளை அக்வாரியம்தான் உலகின் மிகப்பெரிய ஃப்ரீஸ்டாண்டிங் உருளை அக்வாரியம் எனக் கூறப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • internationa, IndiaGermanyGermanyGermany

ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினில் சுமார் 1,500 மீன்கள் வசிக்கும் ஒரு பெரிய அக்வாரியம் ஒன்று, வெடித்துச் சிதறியதில் 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெர்லினின் மிட்டே மாவட்டத்தில் ஒரு வணிக வளாகத்தில் ரேடிசன் ஹோட்டல் மற்றும் அக்வாரியம் உள்ளது. அங்குள்ள உருளை அக்வாரியம் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியதில் பரபரப்பான முக்கியச் சாலையில் ஒரு மில்லியன் லிட்டர் மற்றும் குப்பைகள் சிதறின. உடனடியாக தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

‘சீ லைஃப் பெர்லின்’-ஐ பொறுத்தவரை, இந்த உருளை அக்வாரியம்தான் உலகின் மிகப்பெரிய ஃப்ரீஸ்டாண்டிங் உருளை அக்வாரியம் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் உயரம் 46 அடி ஆகும். ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் கூறுகையில், அக்வாரியம் வெடித்தது ஒரு நிலநடுக்கம் போல் உணரப்பட்டது என்றும், இச்சம்பவம் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், நிறைய உயிரிழந்த மீன்கள், குப்பைகள் என இந்த இடம் காட்சியளித்ததாகவும் கூறினர்.

Also Read:  நியூசிலாந்தில் விநாயகர் கோவில்!

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஹோட்டலில் தங்கியிருந்த சுமார் 350 பேரை உடனடியாக வெளியேற்றினர். அக்வாடோம் மீன்வளம் வெடித்ததற்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று பெர்லின் தீயணைப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

top videos

    DomAquaree வளாகத்தின் வலைத்தளத்தின்படி, அக்வாரியம் கடைசியாக 2020-ல் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேம்படுத்தும் பணியின் போது, ​​தொட்டியில் இருந்து தண்ணீர் அனைத்தும் முறையாக வெளியேற்றப்பட்டு, கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள அக்வாரியத்தில் மீன் வளர்ப்பு பராமரிப்பு வசதி உள்ளதால் மீன்கள் அனைத்தும் அங்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    First published:

    Tags: Fish, Germany, Tamil News