உலகின் பெரிய மலர் கார்பெட்... துபாய் கின்னஸ் சாதனைக்காக பறந்த பெங்களூரு மலர்கள்!

இந்தியா, கென்யா மற்றும் பல நாடுகளிலிருந்து துபாய்க்கு சுமார் 50 டன் மலர்கள் கொண்டு வரப்பட்டன.

உலகின் பெரிய மலர் கார்பெட்... துபாய் கின்னஸ் சாதனைக்காக பறந்த பெங்களூரு மலர்கள்!
மலர் கார்பெட் (படம்- khaleejtimes)
  • News18
  • Last Updated: November 26, 2019, 7:11 PM IST
  • Share this:
உலகின் மிகப்பெரிய மலர் கார்பெட் என்ற கின்னஸ் சாதனைக்காக துபாய்க்கு சுமார் 41,444 கிலோ சாமந்திப் பூக்கள் பெங்களூருவிலிருந்து அனுப்பப்பட்டன.

துபாய் விழா நகரத்தில் கின்னஸ் சாதனைக்காக உலகின் மிகப்பெரிய மலர் கார்பெட் அமைக்கப்பட்டது. ’பொறுமைக்கான மலர்கள்’ எனத் தலைப்பிடப்பட்ட இச்சாதனை இத்தாலியின் மலர் கார்பெட் சாதனையை முறியடித்தது. இத்தாலி மலர் கார்பெட் கடந்த 2016-ம் ஆண்டு 3980.84 சதுர மீ-க்கு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது இச்சாதனையை முறியடித்த துபாய் 5426.65 சதுர மீ-க்கு மலர்களை விரித்திருந்தது. இந்தச் சாதனை நிகழ்வை துபாய் அமைச்சகத்துடன் இணைந்து கேரள முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு நிகழ்த்தியது. இந்தியா, கென்யா மற்றும் பல நாடுகளிலிருந்து துபாய்க்கு சுமார் 50 டன் மலர்கள் கொண்டு வரப்பட்டன.


ஆனால், இவற்றில் 7 டன் மலர்கள் வாடிவிட்டதால் 9,290.30 சதுர மீட்டர்க்கு நிகழ்த்தப்பட வேண்டிய சாதனை 5426.65 சதுர மீ-க்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.மேலும் பார்க்க: ராதிகா ஆப்தே முதல் அனுராக் காஷ்யப் வரை... இந்தியாவின் ’எம்மி விருதுகள்’ சாதனை!
First published: November 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading