Home /News /international /

மாசில்லா ரயில்! ஜெர்மனியில் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை.. அதன் சிறப்பம்சங்கள் இதோ

மாசில்லா ரயில்! ஜெர்மனியில் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை.. அதன் சிறப்பம்சங்கள் இதோ

முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை ஜெர்மனியில் தொடக்கம்

முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை ஜெர்மனியில் தொடக்கம்

ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மிச்சமாவதுடன், நாட்டை மாசு காற்றில் இருந்து பாதுகாக்கும் என ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • intern, IndiaMunichMunich
    புவி வெப்பமயமாதலை குறைக்கும் வகையில் உலகிலேயே முதன்முறையாக ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் ரயில் ஜெர்மனியில் ஓடத் தொடங்கியுள்ளது. பேருந்து, கார், விமானம் என எத்தனை விதமான போக்குவரத்து வசதிகள் வந்தாலும், என்றும் இனிமையானது ரயில் பயணம். ஆரம்ப நாட்களில் நீராவி மூலம் இயங்கி வந்த ரயில்கள், இப்போது டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே.

    டீசல் விலை நாளுக்கு உயர்ந்து வரும் நிலையில், தொழிற்சாலைகள் பெருக்கத்தால் மின்சாரத்திற்கும்  தட்டுப்பாடு ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமான டீசல் மற்றும் மின்சாரப் பயன்பாட்டால் உலகையே அச்சுறுத்தி வருகிறது புவி வெப்பமயமாதல். 2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தப்படி, பசுமை வாயு வெளியீட்டைக் குறைத்து, வெப்பமயமதாலை கட்டுப்படுத்துவதற்காக, அதிகரிக்கப்பட இருக்கிறது ஹைட்ரஜன் வாயு உற்பத்தி. அதன் தொடர்ச்சியாக, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், ரயில்களை இயக்க கையில் எடுத்துள்ள எரிபொருள் ஹைட்ரஜன் வாயு.

    இதைப் பயன்படுத்தி, ரயில்களை இயக்க இந்திய அரசு ஒப்பந்தம் கோரியுள்ள நிலையில், அதை முதன்முறையாக செய்து காட்டியுள்ளது ஜெர்மனி அரசு. உலகிலேயே முதன்முறையாக ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் பயணிகள் ரயில் சேவையைத் தொடங்கியுள்ளது ஜெர்மனி. ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் ரயில்கள் இன்றும் டீசல் மற்றும் மின்சாரத்திலேயே இயங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்திய மதிப்பில் ரூ.737 கோடி. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டத்தை நடத்தியது ஜெர்மனி.

    தற்போது, லோயர் சாக்சோனியில் இருந்து பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயங்கத் தொடங்கியுள்ளது ஹைட்ரஜன் ரயில். சுற்றுப்புற காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனுடன் ஹைட்ரஜன் கலந்து உற்பத்தியாகி விடுகிறது, ரயிலை இழுக்கத் தேவையான மின்சாரம். இதன்மூலம், கார்பன் வெளியேறுவது ஆண்டுக்கு 4 ஆயிரத்து 400 டன்கள் வரை குறையும் என கணக்கிட்டுள்ளது ஜெர்மனி அரசு. அத்துடன் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மிச்சமாவதுடன், நாட்டை மாசு காற்றில் இருந்து பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் கூறியுள்ளது பெருமையுடன்.

    இதையும் படிங்க: இருவேறு தம்பதியினருக்கு ஒரேமாதிரி பிறந்த குழந்தைகள்.. எப்படி சாத்தியம்?

    அல்ஸ்டாம் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரயில்கள் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. முதற்கட்டமாக 14 பயணிகள் ரயில்களை ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கி வருகிறது ஜெர்மனி அரசு.

    இன்னும் மூன்றே ஆண்டுகளில் அனைத்து பயணிகள் ரயில்களையும் ஹைட்ரஜன் வாயுவில் இயக்க திட்டமிட்டுள்ளது ஜெர்மனி. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலும் இந்த ஹைட்ரஜன் வாயு தொழில்நுட்பம் இறக்குமதியாகலாம்.காலநிலை மாற்றம் குறித்து கவலைப்பட்டுக் கொண்டே, அதுவரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
    Published by:Kannan V
    First published:

    Tags: Germany, Hydrogen-Powered Train

    அடுத்த செய்தி