சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பிப்ரவரி 2ம் தேதி உலக சதுப்பு நில தினம் (World Wetlands Day) கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம், முக்கியத்துவம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..
ஈரநிலங்கள் பூமிக்கு ஆற்றும் முக்கிய பங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சதுப்பு நிலத்தின் முக்கியத்தும் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் உலக சதுப்பு நில தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பூமியின் மொத்த நிலப்பரப்பில் 6 சதவீதம் சதுப்பு நிலங்கள் உள்ளன. இவை இயற்கையாக உருவானது அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டது என இருவகையாக பிரிக்கப்படுகிறது.
உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. இவை பல்லுயிர் பெருக்கத்திற்கான சரணாலயமாக விளங்குகின்றன.
இதையும் படியுங்கள் : சவுதி அரேபியாவில் யோகா திருவிழா.... ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
அனைத்து ஏரிகள் மற்றும் ஆறுகள், நிலத்தடி நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள், ஈரமான புல்வெளிகள், முற்றா நிலக்கரி நிலங்கள், சோலைகள், முகத்துவாரங்கள், டெல்டாக்கள் மற்றும் அலையத்தி காடுகள், பிற கடலோரப் பகுதிகள், பவளப்பாறைகள் ஆகியவையும், மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மீன் குளங்கள், நெல் வயல்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் உப்பளங்கள் போன்றவையும் அடங்கும்.
வரலாறு:
1971ஆம் ஆண்டு, ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ராம்சர் (Ramsar) எனும் நகரில் உலகளாவிய சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் “ராம்சார் ஒப்பந்தம்” கையெழுத்தானது. ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற அந்த மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தான பிப்ரவரி 2ம் தேதியை குறிக்கும் விதமாகவே, இந்நாளில் ‘உலக சதுப்பு நில தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : வாவ்...இவ்ளோ அழகா நம்ம பூமி! ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து பூமியை புகைப்படம் எடுத்த விண்வெளி வீரர்!
இதனைத்தொடர்ந்து 1997ம் ஆண்டு முதல் சதுப்பு நிலங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2015ம் ஆண்டு முதல் 15 முதல் 24 வயதினருக்கான புகைப்பட போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி அன்று ஐநா பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, உலக சதுப்பு நிலங்கள் தினம் சர்வதேச தினமாக இந்த ஆண்டு முதன் முறையாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம்:
நமது உடலை எப்படி சுத்தப்படுத்த சிறுநீரகங்கள் மிக முக்கியமானவையாக இருக்கிறதோ? அதேபோல் பூமியின் சிறுநீரகங்களாக சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன. இவை மழைக்காலங்களில் நீரை சேமிக்க மட்டுமல்ல, வெள்ளத்தில் இருந்து சுற்றியுள்ள நிலப்பரப்பை பாதுகாப்பதிலும் பெரும்பங்காற்றுகின்றன.
இதையும் படியுங்கள் : செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் - ஆய்வாளர்களின் நம்பிக்கையை மாற்றிய புதிய ஆய்வு
பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கிய காரணியாக விளக்கும் சதுப்பு நிலங்கள், அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு புகலிடமாகவும் திகழ்கிறது. உலக அளவில் சதுப்பு நிலங்கள் வெறும் 6 சதவீதம் மட்டுமே இருந்தாலும், அனைத்து தாவர மற்றும் விலங்கு இனங்களில் 40 சதவீத ஈர நிலங்கள் வாழ்வதே சதுப்பு நிலங்களுக்கான முக்கியத்துவத்திற்கு சிறந்த சான்றாகும்.
உலக சதுப்பு நில தினம் தீம்:
2022ம் ஆண்டுக்கான உலக சதுப்பு நில தினத்தை கொண்டாடத்தின் கருப்பொருளாக மக்கள் மற்றும் இயற்கைக்கான சதுப்பு நில நடவடிக்கை என்பதாகும். சதுப்பு நிலங்களை மறைந்துவிடாமல் காப்பாற்றவும், சீரழிந்த பகுதிகளை மீட்டெடுக்கவும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக முதலீடு செய்வது குறித்தும், மக்கள் மற்றும் அரசியல் சக்திகளின் ஆதரவு குறித்தும் இந்த ஆண்டு பிரச்சாரம் முன்னெடுக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nature lover, Nature plant