• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்த உலகின் செல்வ வளம்!

20 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்த உலகின் செல்வ வளம்!

உலகின் செல்வவளம் மிக்க நாடு

உலகின் செல்வவளம் மிக்க நாடு

சீனாவின் செல்வ வளம் கடந்த இருபது ஆண்டுகளாக நீடித்த, நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளதாக மெக்கின்சி (McKinsey & Company) தெரிவித்துள்ளது. உலகின் செல்வ வளமும் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • Share this:
    உலகின் செல்வ வளம் இந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதில், மூன்றில் ஒரு பங்கு சீனாவின் செல்வ வளம் ஆகும்.

    உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமாக மெக்கின்சி (McKinsey & Company) திகழ்கிறது. உலகின் செல்வ வளம் மிக்க நாடு தொடர்பாக மெக்கின்சி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. உலகின் செல்வ வளத்தில் 60 சதவீதத்திற்கு மேல் தன்னகத்தே கொண்டுள்ள 10 நாடுகளின் இருப்புநிலை அறிக்கைகளை ( balance sheets ) ஆய்வு செய்து இது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.  சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், ஸ்வீடன், மெக்சிகோ, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    இதில்,  செல்வ வளம் மிக்க நாடுகள் வரிசையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. 2000ம் ஆண்டில்  7 ட்ரில்லியன் டாலராக இருந்த சீனாவின் செல்வ வளம் 2020ம் ஆண்டில் 120 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அந்நாட்டின் செல்வ வளம் 113 ட்ரில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.

    இந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவின் செல்வ வளம் 90 ட்ரில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதேபோல் உலகின் செல்வ வளம் இந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. 2000ஆம் ஆண்டில்  156 ட்ரில்லியன் டாலராக இருந்த உலகின் செல்வ வளம் 2020ல் 514 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு சீனாவின் செல்வ வளம் ஆகும். உலகின் பெரிய அளவிலான செல்வ வளம் ரியல் எஸ்டேட் துறையில் உள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்கா - சீனா இடையேயான உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை அதிகரிக்க வேண்டும்: சீன அதிபர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: