ஹோம் /நியூஸ் /உலகம் /

உலகின் தலைசிறந்த உணவுகள் பட்டியல் வெளியீடு.... இந்திய உணவுகளுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

உலகின் தலைசிறந்த உணவுகள் பட்டியல் வெளியீடு.... இந்திய உணவுகளுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

இந்திய உணவுகள்

இந்திய உணவுகள்

World Top Foods List : உலகின் தலைசிறந்த உணவுகள் பட்டியல் வெளியீடு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் தலைசிறந்த உணவுகள் என்ற பட்டியலில் இந்திய உணவுகளுக்கு 5-ம் இடம் கிடைத்துள்ளது. Taste atlas என்ற அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பொதுமக்களிடம் சுவை மிகுந்த உணவுகள் குறித்து கருத்துகளை கேட்டு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் 4.72 புள்ளிகளுடன் இத்தாலிய உணவுகளுக்கு முதலிடமும், கிரீஸ், ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. 4.54 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 5-வது இடம் கிடைத்துள்ளதாக கூறியுள்ள அந்த அமைப்பு, இந்திய உணவுகளில் பட்டர் கார்லிக் நான், கீமா, மலாய் மற்றும் கரம் மசாலா கலந்த உணவுகள் சிறந்தவை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தலை சிறந்த உணவகங்கள் என்ற டேஸ்ட் அட்லஸ் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள எந்த உணவகங்களும் முதல் 5 இடங்களை பிடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Food