ஹோம் /நியூஸ் /உலகம் /

கின்னஸ் சாதனைப் படைத்த உலகின் உயரமான பெண்ணின் முதல் விமான பயணம்.. சாத்தியமானது எப்படி?

கின்னஸ் சாதனைப் படைத்த உலகின் உயரமான பெண்ணின் முதல் விமான பயணம்.. சாத்தியமானது எப்படி?

ருமேசா கெல்கி

ருமேசா கெல்கி

7 அடி உயரம் கொண்ட உலகின் உயரமான பெண் முதன் முதலில் விமான பயணம் மேற்கொண்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaTurkeyTurkey

  உலகின் உயரமான பெண் என்று கின்னஸ் சாதனைப் படைத்த துருக்கி நாட்டை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ருமேசா கெல்கி வாழ்க்கையில் முதல் முதலில் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

  25 வயதான ருமேசா கெல்கி அரிதான மரபணு கோளாறு காரணத்தினால் பாதிக்கப்பட்டவர். அதனால் வளர்ச்சி அதிகரித்து 7 அடி உயரம் வளர்ந்துள்ளார். அதற்காக உலகின் உயரமான பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

  அவரின் உயரம் காரணமாக அவரால் விமான பயணம் மேற்கொள்ள இயலாத நிலையில் துருக்கிய ஆர்லைன் அவரை விமானத்தில் பறக்க வைத்துள்ளது. அதற்காக விமானத்தில் 6 இருக்கைகளை விமான நிர்வாகிகள் அகற்றியுள்ளனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by RUMEYSA GELGI (@rumeysagelgi)  துர்கி இஸ்தான்பில்லில் இருந்து அமெரிக்கா சான் ஃபாரன்ஸ்கோ வரை அவர் பயணம் செய்துள்ளார். இந்த நெகிழ்வான சம்பவத்தின் அனுபவத்தை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

  Also Read : லாக்டவுன் போட்டும் பிரயோஜனம் இல்லை... சீனாவில் மீண்டும் உச்சம் கண்ட கொரோனா!

  அதில், தொடக்கத்திலிருந்து முடிவு வரை பயணம் அவருக்குச் சிறப்பாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார். இது என் முதல் பயணம். ஆனால் இது கடைசியாக அமையாது. இந்த பயணத்தை நினைவாக்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றி என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Guinness, Turkey, Viral News