ஹோம் /நியூஸ் /உலகம் /

தனக்கான துணையை தேட ரஷ்யா செல்ல இருக்கும் உலகிலேயே மிக உயரமான மனிதர்!

தனக்கான துணையை தேட ரஷ்யா செல்ல இருக்கும் உலகிலேயே மிக உயரமான மனிதர்!

 உலகிலேயே மிக உயரமான மனிதர்

உலகிலேயே மிக உயரமான மனிதர்

சாதாரண வளர்ச்சி கொண்ட மனிதர்களுக்கே துணையை தேடுவது சிரமமாக இருக்கிறது என்றால், உலகின் உயரமான மனிதருக்கு இது இன்னமும் கடினமான ஒன்றாக தான் இருந்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பொதுவாக வாழ்க்கை துணையை தேடுவது என்பது நாம் நினைப்பது போன்று சாதாரண விஷயம் அல்ல. கடலில் முத்தெடுப்பதை விடவும் கடினமான ஒன்றாகும். ஆண், பெண் உறவு என்பது பல்வேறு சிக்கல்களை கொண்டது. இதனால் தான் ஒரு சிறந்த துணையை தேர்ந்தெடுப்பது சவாலான ஒன்றாக இருக்கிறது.

சாதாரண வளர்ச்சி கொண்ட மனிதர்களுக்கே துணையை தேடுவது சிரமமாக இருக்கிறது என்றால், உலகின் உயரமான மனிதருக்கு இது இன்னமும் கடினமான ஒன்றாக தான் இருந்துள்ளது. ஆம், துருக்கி நாட்டை சேர்ந்த 39 வயதான சுல்தான் கோசென் என்கிற விவசாயி மார்டின் நகரில் வாழ்ந்து வருகிறார். இவர் தான் தற்போது வரை உலகின் மிக உயரமான மனிதராக இருந்து வருகிறார். இவரது உயரம் 8"3 அடி ஆகும். அதாவது சுமார் 251 செ.மீ உயரம் கொண்டவர். இவர் உலகிலேயே உயரமான மனிதர் என்கிற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

சிறு வயதில் கோசென் அவர்களுக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக இவர் ஜைஜாண்டிசம் என்கிற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வளர்ச்சி ஹார்மோன்கள் அதிக அளவில் உடலில் சுரந்து இவரை மிக உயரமான மனிதராக மாற்றி உள்ளது. இருப்பினும் இவரின் உயரம் இவருக்கு பல வகையில் அசௌகரியத்தை தந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு சிரியா நாட்டு சேர்ந்த மேர்வ் டிபோ என்கிற பெண்மணியை மணந்துள்ளார். அப்பெண்ணின் உயரம் 175 செ.மீ (5’9”) இருந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள் என்பதாலே பல ஆண்டுகள் ஒன்று சேர்ந்து வாழ முடியவில்லை. கோசெனுக்கு துருக்கி மொழி மட்டுமே தெரியும். அதே போன்று அவரின் முன்னாள் மனைவிக்கு அரபி மொழி மட்டுமே தெரியும். இவர்கள் இருவருக்கும் இடையில் பெரிய சிக்கலாக இருந்ததே மொழி பிரச்சினை தான். இருப்பினும் சில ஆண்டுகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
 
View this post on Instagram

 

A post shared by Sultan KÖSEN (@sultankosen47)சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். அதன் பின் தற்போது தனது மகனையும், மகளையும் பார்த்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் உள்ளதால், நல்லா மணப்பெண் ஒருவரை தேடி வருகிறார். இந்நிலையில் கொசேன் ரஷ்யா நாட்டு பெண்கள் அன்பிலும் அழகிலும் சிறந்தவர்கள் என்பதால் அவர்களில் இருந்து ஒருவரை தனக்கான மணப்பெண்ணாக தேர்வு செய்ய உள்ளார்.

மேலும் அந்த பெண்ணை துருக்கி நாட்டிற்கு அழைத்து சென்று, அங்கையே தங்களது வாழ்கையை தொடங்க உள்ளதாகவும் கோசென் தெரிவித்துள்ளார். இவர் தேர்ந்தெடுக்கும் பெண்ணிற்கு தேவையான அனைத்தையும் கோசென் பார்த்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது மகனையும், மகளையும் நன்றாக பார்த்து கொண்டால் மட்டும் போதும் என்று கூறியுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Sultan KÖSEN (@sultankosen47)கோசென் தனக்கான பெண்ணை ரஷ்யாவிற்கு சென்று தேடுவதற்கான பயணத்தை எப்போது தொடங்க போகிறார் என்பதை இன்னும் வெளியிடவில்லை. இவருக்கு சிறந்த துணை கிடைத்தால் நல்லது தான்.

First published:

Tags: Children, Russia