இன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா?

இன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா?

இன்று உலக புள்ளிவிவர தினம்

இன்று சர்வதேச புள்ளிவிவர தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

 • Share this:
  'தரவு என்பது ஒரு எண்ணெய்' என முன்னர் பிரிட்டிஷ் கணிதவியலாளரும், தொழில்முனைவோருமான கிளைவ் ஹம்பி கூறியுள்ளனர். தரவு என்பது, எண்ணெயைப் போல சுத்திகரிக்கப்படாமல் இருந்தால் அதன் பயன் சிறப்பாக இருக்காது என்பதை அவர்கள் வலியுறுத்த முயன்றார்.

  இது குறிப்பிடத்தக்கதாக இருப்பதற்கும் மக்களுக்கு பயனளிப்பதற்கும் தரவு பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். காலப்போக்கில், கிளைவின் வார்த்தைகள் மேலும் பொருத்தமானவையாக மாறியது. அந்த வகையில், உலக புள்ளி விவர தினம் உலகின் முன்னேற்றத்திற்கான புள்ளிவிவரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.

  இந்த தினம் குறித்து, 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்
  துறையின் புள்ளிவிவரப் பிரிவால் அறிவிக்கப்பட்டது. அதனை தொடந்து 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, முதல் உலக புள்ளிவிவர தினம் 2010ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, உலக புள்ளிவிவர தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

  ALSO READ |  Gold Rate | அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

  புள்ளிவிவர தினத்திற்கான இந்த ஆண்டு தீம் ‘நாம் நம்பக்கூடிய தரவுகளுடன் உலகை இணைக்கிறது’ என்பது தான். தேசிய புள்ளிவிவர அமைப்பில் நம்பிக்கை மற்றும் புதுமையின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுவதே இதன் யோசனை ஆகும்.
  இந்த நாளை முதன்முறையாகக் கொண்டாடும் ஐ.நா புள்ளிவிவரப் பிரிவின் இயக்குனர் பால் சியுங், இந்தத் தொழிலையும் புள்ளிவிவர அலுவலகங்களையும் “உலகின் ஒரு முக்கியமான மற்றும் மதிப்புமிக்க நிறுவனமாக” மாற்றுவோம்
  என்று கூறினார்.

  ALSO READ | உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் எளிமையான  முறையில் நாமினியை இணைக்கலாம்..

  புள்ளிவிவர ஆர்வலர்கள் மற்றும் வல்லுநர்கள் #StatsDay2020 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தரவு மற்றும் புள்ளிவிவரங்களுடன் தங்கள் அனுபவத்தைப் பகிர்வதன் மூலமும் ஆன்லைன் விரிவுரைகளில் கலந்துகொள்வதன் மூலம் இந்த நாளின் முக்கியத்துவத்தை பகிர்ந்து வருகின்றனர்.

  19ம் நூற்றாண்டில் மக்கள்தொகை மற்றும் பொருளாதாரங்களைப் படிப்பதற்காக புள்ளிவிவரங்கள் முறையாக உருவாக்கப்பட்டன. அதன்படி, நவீன புள்ளிவிவரங்களின் தந்தை சர் ரொனால்ட் ஃபிஷர் என்று கருதப்படுகிறார். அவர் மக்கள்தொகை மரபியலை நெருக்கமாகப் படித்தார் மற்றும் சோதனை வடிவமைப்புகளைக் கண்டுபிடித்தார்.

     சர் ரொனால்ட், தரவை பகுப்பாய்வு செய்வதற்கான கணினி வழிமுறைகளையும் உருவாக்கினார். புள்ளிவிவரங்களில் ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அவரது பணி ஒரு நிலையான குறிப்பு புள்ளியாக மாறியது.
  Published by:Sankaravadivoo G
  First published: