உருவத்தில் சிறியதாக, அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் பறவை சிட்டுக்குருவி. அதன் அழகையும், குரலின் மென்மையையும் ரம்மியமாக ரசிக்கலாம். குருவிகள் நகர்ப்புறங்களில் கொல்லைப்புறங்களிலும், பசுமையான பகுதிகளிலும் வாழ்கின்றன என்று அறியப்படுகிறது, ஆனால் "கடந்த இரண்டு தசாப்தங்களில், சிட்டு குருவிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும் குறைந்து வருகிறது" என்று wwfindia.org தகவல் தெரிவித்துள்ளது. இந்த உலக குருவி நாளில், குருவிகளுக்கான இடங்களை மதிக்க குழந்தைகளையும் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் ஊக்குவிப்போம்.
இதனால் சிட்டு குருவிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி உலக குருவி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. சிட்டு குருவிகள் அழிந்து வருவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சிட்டு குருவிகளை பாதுகாப்பதற்கும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக குருவி தினம் என்பது நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி ஆஃப் இந்தியா மற்றும் பிரான்சின் சுற்றுச்சூழல் அறக்கட்டளையும் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும். முகமது திலாவர் என்பவர் இந்த முயற்சியை முன்னெடுத்த நிலையில், 2008ம் ஆண்டில் "சுற்றுச்சூழல் மாவீரர்களில்" ஒருவராக அவர் போற்றப்பட்டார்.
உலக குருவி தினத்தன்று, நம்மிடையே உள்ள இளம் இயற்கை ஆர்வலர்கள் பறவைகளை நேசிக்குமாறு ஊக்குவிப்போம். குறிப்பாக கடுமையான கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பறவைகளுக்கு மனிதர்களைப் போலவே குளிர்ந்த நிழல்களும், தண்ணீரும் தேவைப்படுகிறது. எனவே உங்கள் வீடு தேடி வரும் சிட்டு குருவிகளுக்கு தண்ணீர், தானியங்கள் வைப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
சிட்டு குருவி குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள் :
பொதுவான பெயர்: சிட்டு குருவி
அறிவியல் பெயர்: பஸ்ஸர் டொமெஸ்டிக்ஸ்
உயரம்: 16 சென்டிமீட்டர்
விங்ஸ்பன்: 21 சென்டிமீட்டர்
எடை: 25-40 கிராம்
Also read... 2021ம் ஆண்டு வசந்த காலத்தை Doodles மூலம் வரவேற்கும் கூகுள்...!
அழியும் குருவிகள்: மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும், தோட்டம் அமைக்க வேண்டும். பயிர்கள், தாவரங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது. குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். வீட்டு முன், மொட்டை மாடியில் தானியங்களை தூவ வேண்டும். மண்பானையில் வைக்கோல் வைத்தால், குருவிகள் கூடு கட்ட பயன்படும்.
சிட்டுக்குருவிகளுக்கு உணவளிக்க உங்கள் வீட்டின் பால்கனியில் ஒரு கிண்ணம் தண்ணீர் மற்றும் தானியங்களை வைத்திருக்க உங்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பதோடு, அவற்றை செய்யவும் ஊக்குவியுங்கள்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.