உலகம் ஒரு பார்வை : இன்சூரன்ஸ் பணத்திற்காக உறவினர் சடலத்தை தூக்கிச்சென்று காண்பித்த பெண், டோர்டெலிவரி செய்ய ரோபோ அறிமுகம்

உலகம் ஒரு பார்வை : இன்சூரன்ஸ் பணத்திற்காக உறவினர் சடலத்தை தூக்கிச்சென்று காண்பித்த பெண், டோர்டெலிவரி செய்ய ரோபோ அறிமுகம்
  • News18
  • Last Updated: November 22, 2019, 9:07 AM IST
  • Share this:
அமெரிக்காவில் டோர் டெலிவரிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரோபோ, தாய்லாந்து சென்றுள்ள போப் பிரான்சிஸ் அந்நாட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து உள்ளிட்ட செய்திகளை உலக செய்திகள் தொகுப்பில் பார்க்கலாம்.ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தாய்லாந்து சென்றுள்ள போப் பிரான்சிஸ் நேற்று பாங்காக்கின் தேசிய விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பாப்பல் மாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து தாய்லாந்தின் கலாச்சார நடனத்தை போப் பிரான்சிஸ் பார்த்து ரசித்தார் .
பொருட்களை சுமந்துச்சென்று வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யும் ரோபா முதல் முறையாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் போஸ்டன் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரோபாவை வெஸ்பா நிறுவனம் வடிவமைத்துள்ளது. 50 கிலோ எடை வரை பொருட்களை சுமந்துச்செல்லும் இந்த ரோபோவின் விலை இந்திய மதிப்பில் 2 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரிமோட் மற்றும் மேனுவல் முறையில் இந்த ரோபோ இயக்கப்படுகிறது.

 

ரெட்புல் பார்முலா ஒன் கார் பந்தய வீரர்கள் புவிஈர்ப்பு விசை இல்லாமல் உலகின் அதிவேக பிட் ஸ்பாட் செய்து சாதனை படைத்துள்ளனர். ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோமோஸின் பயிற்சி மையத்தில், ஜிரோ கிராவிட்டியில் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனின் டயர்களை 1.82 விநாடிகளில் மாற்றும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் இன்சூரன்ஸ் பணத்திற்காக இறந்தவரின் உடலை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கே கொண்டு சென்று காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிகாவின் குவாசுலு-நடால் மகாணத்தில் கடந்த 15-ஆம் தேதி, பெண் ஒருவர் தனது குடும்பத்தில் இறந்தவரின் உடலை ஒரு பையில் மூட்டையாக கட்டி காரில் எடுத்துச்சென்றுள்ளார். அவர் இறந்ததை நிரூபிப்பதற்காக உடலை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொண்டுபோய் வைத்துள்ளார். இதற்கு வருத்தம் தெரிவிந்த அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் அந்த பெண்ணை கண்டித்துள்ளது.
First published: November 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்