• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக திரளும் மக்கள்!

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக திரளும் மக்கள்!

ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் தாக்குதல் 7வது நாளாக தொடரும் நிலையில்,  உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பேரணி சென்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

  • Last Updated :
  • Share this:
    ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் தாக்குதல் காசா நகரில் 7வது நாளாக தொடரும் நிலையில்,  உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பேரணி சென்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

    இஸ்ரேலியர்கள்- பாலஸ்தீனர்கள் இடையேயான மோதல் கடந்த சில நாட்களாக வன்முறையாக மாறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி காசா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.  வான்வெளி தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

    மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல் ஜசீரா, அசோசியேட் பிரஸ் ஆகிய ஊடகங்கள் செயல்பட்டு வந்த கட்டிடமும் வான்வெளி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

    காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் இன்று 7வது நாளாக தொடர்கிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவரும்  தாக்குதலில் 57 குழந்தைகள் உட்பட 180 பேர் உயிரிழந்துள்ளதாக அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

    எனினும், தேவைக்கேற்ப தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் குழு இன்று கூடும் என பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் அறிவித்திருக்கிறார்.

    இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

    காசா நகர் மீது நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவை வலியுறுத்தியுள்ளன.

    இந்நிலையில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளிலும் மக்கள் பேரணி சென்றனர்.  ஜெர்மனி, கத்தார், அமெரிக்கா, ஸ்பெயின், ஈராக்,  தென் ஆப்ரிக்கா, துருக்கி, பெல்ஜியம், லெபனான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவிலான பொதுமக்கள் பேரணியில் பங்கேற்று பாலஸ்தீனர்களுக்கு தங்களது ஆதரவை பறைசாற்றினர்.

    இதேபோல், “#PalestineBleeding போன்ற ஹேஷ்டேக்கள் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: