• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • World Photography Day | உலக புகைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் நாள் இன்று!

World Photography Day | உலக புகைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் நாள் இன்று!

Youtube Video

World Photography Day | மனிதனின் மூன்றாவது கண்ணாக இருந்து நம் உணர்வுகளை, நிழலாக வடிக்கும் புகைப்படங்களை எடுக்கும் கலைஞர்களை சிறப்பிக்கும் நாள்

  • Share this:
    வரலாற்றின் உண்மைத் தன்மையை நமக்கு எடுத்துரைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது புகைப்படங்களே. அதை எடுக்கும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படும் நிலையில், கொரொனா ஊரடங்கால் அவர்கள் இன்னல்கல்களை சந்தித்துள்ளனர்.

    போட்டோ என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதியான பிரியம் உணடு. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று எத்தனையோ விதமான கேமராக்களுக்கும், செல்போன்களில் செல்ஃபிகளும் நம்மை ஆட்கொண்டிருந்தாலும், பள்ளி காலங்களில் பஸ் பாஸ், தேர்வு ஹால்டிக்கெட், நண்பர்களுடனான பிளாக் அன் ஒயிட் குழு புகைப்படங்கள் இன்றும் நம் வீட்டு அலமாரியை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. மனிதனின் மூன்றாவது கண்ணாக இருந்து நம் உணர்வுகளை, நிழலாக வடிக்கும் புகைப்படங்களை எடுக்கும் கலைஞர்களை சிறப்பிக்கும் நாளாகவே ஆகஸ்ட் 19 தேதியை உலக புகைப்பட தினமாக கொண்டாடுகிறோம்.

    கோவையில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் உலக புகைப்பட தினத்தை கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள புகைப்பட கலைஞர்கள் விழாவை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

    ஊரடங்கால் பெரும்பாலான திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்சிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் அரசியல் பொது கூட்டங்கள் நடக்காததால் வருவாயின்றி நண்பர்களின் உதவியை எதிர்ப்பாத்துக் கொண்டிருப்பதாக புகைப்பட கலைஞர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    கடந்த காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு உதவினோம் ஆனால் இந்த ஆண்டு நாங்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் போஷன் பை பிடிக்கலாம் அரசு நிகழ்ச்சிகள், மனிதனின் சந்தோசமான தருணங்களை பதிவு செய்யும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு அரசு உதவி செய்யவில்லை என தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளனர் போட்டோ கிராஃப்பர்கள்.



    கொரொனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பல அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியது போல், தங்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்கி காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: