உலகின் மிகவும் வயதான நபர் என்கிற கின்னஸ் சாதனையை படைத்த ஜப்பானிய மூதாட்டியான கேன் தனகா, அவரது 119 வயதில் ஜப்பானில் இயற்கை எய்தினார்.
கேன் தனகா, 1903 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி ஜப்பானின் தென்மேற்கு ஃபுகுவோகா பகுதியில் பிறந்தார். அதாவது ரைட் சகோதரர்கள் முதல் முறையாக விமானத்தில் பறந்தது எந்த ஆண்டிலோ, நோபல் பரிசை வென்ற முதல் பெண்மணி என்கிற பெருமையை மேரி கியூரி பெற்றது எந்த ஆண்டிலோ, அதே ஆண்டில் தான் கேன் தனகா பிறந்தார்!
கேன் தனகா சமீப காலம் வரை ஒப்பீட்டளவில் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்தார் மற்றும் ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார். அங்கே போர்ட் கேம்ஸ்களை விளையாடுவது, கணித சிக்கல்களை தீர்ப்பது, சோடா மற்றும் சாக்லேட் ஆகியவற்றை விரும்பி உண்பது என மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார்.
தனது இளமை பருவத்தில், தனகா நூடுல்ஸ் கடை மற்றும் அரிசி கேக் கடை உட்பட பல்வேறு வணிகங்களை நடத்தி வந்தார். அவர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, அதாவது 1922 ஆம் ஆண்டில் ஹிடியோ தனகாவை மணந்தார், நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர் ஐந்தாவதாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார்.
2021 இல் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டார்ச் ரிலேயில் பங்கேற்பதற்காக இவர் தனது சக்கர நாற்காலியை தயாராக வைத்து இருந்தார். ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் அவர் ஆசையை தகர்த்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் "உயிருடன் இருக்கும் மிக வயதான நபர்" என்கிற கின்னஸ் உலக சாதனைகளை செய்தபோது, வாழ்க்கையின் எந்த தருணத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது, தனகா அளித்த பதில்: "இப்போது தான்."
We had the honour of meeting Kane Tanaka and awarding her the certificate for being the oldest living person back in 2019 🥰️ pic.twitter.com/VHhV716jqu
அந்த நேரத்தில் கேன் தனகா, தினமும் காலை 6.00 மணிக்கு எழுந்திருப்பாராம்; மதிய வேளைகளில் கணிதம் மற்றும் கையெழுத்துப் பயிற்சி மேற்கொள்வாராம். இவ்வுலகில் 119 ஆண்டுகள் வாழந்த பிறகு, கேன் தனகா கடந்த ஏப்ரல் 19 அன்று காலமானார்.
கேன் தனகாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த உள்ளூர் கவர்னர் சீதாரோ ஹட்டோரி, "இந்த ஆண்டு முதியோர் தினத்தை (செப்டம்பரில் வரும் ஒரு தேசிய விடுமுறை) அவருக்கு தனக்கு பிடித்த சோடா மற்றும் சாக்லேட்டுடன் கொண்டாடுவதை காண நான் ஆவலுடன் இருந்தேன். இந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்" என்று உருக்கமாக கூறி உள்ளார்.
New record: Oldest living person - Sister André, aged 118 years and 73 days old.
Sister André, born 11 February 1904 as Lucile Randon, is the oldest living person as well as the world's oldest nun and the oldest person to survive COVID-19 🙏 pic.twitter.com/3HisPI4saO
நினைவூட்டும் வண்ணம், இந்த ஆண்டு ஜனவரி 18 அன்று, உலகின் மிக வயதான மனிதரான சடர்னினோ டி லே ஃப்யூன்டே கார்சியா (Saturnino de la Fuente García) ஸ்பெயின் நாட்டில் லியோனில் உள்ள அவரது வீட்டில் காலமானார்; அவருக்கு வயது 112 என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அறியாதோர்களுக்கு 1997 இல் 122 வயது மற்றும் 164 நாட்கள் வாழ்ந்து இறந்த பிரெஞ்சு மூதாட்டியான ஜீன் லூயிஸ் கால்மென்ட் தான், கின்னஸால் சரிபார்க்கப்பட்ட மிகவும் வயதான நபர் ஆவார்!
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.