World Nature Conservation Day | உலக இயற்கை பாதுகாப்பு தினம்: சுத்தமான பூமியின் முதல்படி உங்கள் வீடு

சில எளிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இயற்கையை நம்மால் பாதுகாக்க முடியும். உங்கள் குடும்பத்தினருடன் சிறிய மற்றும் குறிப்பிடத்தக்க செயல்களில் நீங்கள் ஈடுபடலாம்.

சில எளிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இயற்கையை நம்மால் பாதுகாக்க முடியும். உங்கள் குடும்பத்தினருடன் சிறிய மற்றும் குறிப்பிடத்தக்க செயல்களில் நீங்கள் ஈடுபடலாம்.

  • Share this:
ஆண்டுதோறும் ஜூலை 28 அன்று உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நமது இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான நினைவூட்டலாக இந்த தினம் செயல்படுகிறது. ஒரு நிலையான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தின் முன்மாதிரியாக ஆரோக்கியமான சூழலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாக கொண்டுள்ளது. நம்மை சுற்றியுள்ள இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் பொறுப்பு என்பதை நாம் உணர வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு தனிமனிதனும் தங்களால் முடிந்தவற்றை செய்ய வேண்டும். தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரின் நல்வாழ்வை உறுதிப்படுத்த ஒரு நிலையான உலகத்தை நோக்கி நாம் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்பதை இந்த தினத்தில் தெரிவித்து கொள்ள ஆசைப்படுகிறோம்.

நல்ல செய்தி என்னவென்றால், இயற்கையை பாதுகாக்க உங்கள் பணத்தை செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதனால் உங்கள் நிலையான வைப்புத்தொகையை எடுக்கவோ அல்லது கடன் வழங்குபவர்களை அல்லது முதலீட்டாளர்களை அணுகவோ தேவையில்லை. சில எளிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இயற்கையை நம்மால் பாதுகாக்க முடியும். உங்கள் குடும்பத்தினருடன் சிறிய மற்றும் குறிப்பிடத்தக்க செயல்களில் நீங்கள் ஈடுபடலாம். இதன் மூலம் உங்கள் வீட்டிலிருந்தே ஒரு பெரிய வித்தியாசத்தை நீங்கள் உருவாக்க முடியும். அப்படியானால் இயற்கையை பாதுகாக்க வீட்டில் நம்மால் முடிந்த மாற்றங்களை செய்வோம். என்ன மாதிரியான மாற்றங்கள் என்பதை பின்வருமாறு காணலாம்.

மறுபயன்பாட்டு ஸ்ட்ராக்களை உபயோகிக்கலாம்:

கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஓரம் தள்ளிவைத்து, மூங்கில், உலோகம், பிபிஏ இல்லாத பொருள், கண்ணாடி, எஃகு அல்லது தாமிரம் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை வாங்கி உபயோகிக்கலாம். அதேபோல உங்கள் வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் காகிதத்தை பல வழிகளில் பயன்படுத்த முயற்சி செய்யலாம். நீங்கள் வீட்டில் சில குறிப்புகளை எழுத நினைத்தால் உங்கள் செய்தித்தாளின் ஒரு பக்கத்தைப் பயன்படுத்தவும். அதேபோல கைகளை துடைக்க காகித டிஸ்ஸுகளுக்கு பதிலாக கை துண்டுகள் பயன்படுத்தவும்.

Must Read | திமிங்கலத்தின் உமிழ்ந்த மெழுகுக்கு இவ்வளவு மவுசு ஏன்? அசர வைக்கும் சீக்ரெட்!

ஒரு நிலையான டயட்டை தொடங்குங்கள்:

இயற்கையைப் பாதுகாப்பதற்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம்? என்று நீங்கள் யோசிக்கலாம். உங்கள் உணவு சுற்றுச்சூழலுக்கு நட்பான வழிகளில் இருந்தால், அவை ஒரு பெரிய கார்பன் தடத்தை நிலத்தில் விட்டு செல்லும். பருவகால மற்றும் உள்ளூர் தாவர அடிப்படையிலான உணவு தயாரிப்புகளுக்கு மாறுவதன் மூலம் வீட்டில் ஒரு புதிய டயட் முறையை ஆரம்பிக்கலாம். கார்பன் உற்பத்தி விருப்பங்கள் விலங்கு சார்ந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதை உள்ளடக்கியது.



வீட்டில் சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீர்கள்:

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கொள்கலன்களை அப்புறப்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடி மற்றும் எஃகு போன்ற நிலையான உலோக மாற்றுகளை பயன்படுத்துங்கள். மளிகை கடைக்கு பிளாஸ்டிக் பைகளை எடுத்துச்செல்வதற்கு பதிலாக துணி அல்லது காகித பைகளை எடுத்து செல்லுங்கள்.

ஆற்றல்-பயனுள்ள பயன்பாடுகளைப் பற்றி சிந்தியுங்கள்:

ஆற்றல் சேமிப்பு சாதனங்களில் முடிந்தவரை முதலீடு செய்யுங்கள். வீட்டில் எல்.ஈ.டி ஒளி விளக்குகளுக்கு மாறுவதன் மூலம் தொடங்கலாம். அவை குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. மேலும் முக்கியமாக, மின்சார கட்டணத்தை நீண்ட காலத்திற்கு குறைக்கின்றன.

இயற்கை தயாரிப்பில் ஈடுபடலாம்:

உரம் தயாரிப்பது உங்கள் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுகளின் அளவைக் குறைப்பதற்கும், உங்கள் கொல்லைப்புறத் தோட்டத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த மற்றும் திறமையான வழியாகும். காய்கறி ஸ்கிராப், முட்டைக் கூடுகள் மற்றும் தேநீர் பைகள் போன்ற சமையலறையிலிருந்து எஞ்சியவற்றை நீங்கள் உங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.

ஒரு பறவை உணவருந்தும் இடத்தை தேர்வு செய்யுங்கள்:

உங்கள் வீட்டில் உள்ள ஏதேனும் அட்டைப்பெட்டியில் பறவை தீவனத்தை வைக்கலாம். பறவைகளுக்கு உணவளிப்பது என்றால் குழந்தைகளுக்கு மிக பிடித்தமான ஒரு விஷயம் எனவே நீங்கள் பறவைகளுக்கு அவர்களின் உணவளிக்க வைக்கலாம். பறவை தீவனத்தை உங்கள் பால்கனியில் அல்லது உங்கள் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் கட்டி தொங்கவிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிராஃப்ட் பிளான்டர்ஸ்:

வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் விஷயங்களை மிகவும் பயனுள்ளதாக மாற்றவும். தேங்காய் குப்பிகள் அல்லது பழைய டயர்களை சிறிது படைப்பாற்றலுடன் உபயோகப்படுத்தும் பொருளாக மாற்றலாம். அதேபோல உணவுப் பாத்திரங்கள் மற்றும் ஜாடிகளை சேமிக்கும் நோக்கங்களுக்காக மீண்டும் பயன்படுத்தலாம்.
Published by:Archana R
First published: