• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • உலகின் மிகவும் மாசுப்பட்ட நகரங்கள்: முதல் 10 இடங்களில் 3 இந்திய நகரங்கள்!

உலகின் மிகவும் மாசுப்பட்ட நகரங்கள்: முதல் 10 இடங்களில் 3 இந்திய நகரங்கள்!

உலகி மாசடைந்த நகரங்கள்

உலகி மாசடைந்த நகரங்கள்

உலகின் மிகவும் மாசடைந்த நகரான இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

  • Share this:
    உலகின் மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முதல் இடத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளது. முதல் 10 இடங்களுக்குள் மேலும் 2 இந்திய நகரங்களும் இடம் பிடித்துள்ளன.

    காற்றின் தரக் குறியீடு (Air Quality index- AQI) மூலம் ஒரு நகரத்தின் மாசு அளவு அளக்கப்படுகிறது.  AQI  அளவு பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்டு இருந்தால்'நல்லது', 51 மற்றும் 100க்கு இடைப்பட்டு இருந்தால் 'திருப்திகரமானது', 101 மற்றும் 200க்குள் இருந்தால் 'மிதமானது', 201 மற்றும் 300க்குள் இருந்தால் 'மோசமானது', 301 மற்றும் 400க்கு இருந்தால் 'மிக மோசமானது' மற்றும் 401 மற்றும் 500க்குள் இருந்தால் 'கடுமையானது' எனக் கருதப்படுகிறது.

    இந்த வகையில் பார்க்கும்போது இந்திய தலைநகர் டெல்லியின் காற்று மாசு அளவு கடுமையானதாக உள்ளது. இந்திய  உச்ச நீதிமன்றம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து டெல்லி அரசு புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

    இந்நிலையில்,  சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட   காலநிலை குழுவும், இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) தொழில்நுட்ப கூட்டாளியுமான IQAir   மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் 10 இடங்களில் 3 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 292 AQI உடன் இந்தியாவின் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    இதையும் படிங்க: டெல்லி காற்று மாசு: ஒரு வாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!


    சீனாவின் செங்குடு,  வியட்நாமின் ஹனொய், கிரிகிஸ்தானின் பிஷ்கெக், சீனாவின் சோங்கிங் ஆகியவை அடுத்தடுத்து இடங்களில் உள்ளன. 7வது இடத்தில் இந்தியாவின் மும்பை நகரும், 8வது இடத்தில் பங்களாதேஷின் டாக்கா நகரும், 9வது இடத்தில் ஈரானின் தெஹ்ரான் நகரும் 10வது இடத்தில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவும் உள்ளன.

    சீனா, போலாந்து ஆகிய நாடுகளின் நகரங்கள் அதிகளவு பட்டியலில்  இடம் பிடித்துள்ளன. கண்டம் அளவில் பார்க்கும்போது ஆசிய நாடுகளே அதிகம் இப்பட்டியலில் உள்ளன.

    மேலும் படிக்க: 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்த உலகின் செல்வ வளம்!


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: