மே 1 - உழைக்கும் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்த நாள்!

இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் 1923-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

Web Desk | news18
Updated: May 1, 2019, 8:26 AM IST
மே 1 - உழைக்கும் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்த நாள்!
மே தினம்
Web Desk | news18
Updated: May 1, 2019, 8:26 AM IST
உலகம் முழுவதும் உழைக்கும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுத்த நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். பாட்டாளி வர்க்கத்தின் தியாகத்தையும், வலிமையையும்  மே தினம் தன்னுள்ளே கொண்டுள்ளது.

காலம் காலமாக மறுக்கப்படும் தங்களது உரிமைகள் குறித்து எந்த விழிப்புணர்வு இல்லாமலே இருந்தது தொழிலாளர் வர்க்கம். இதன் ஒரு பகுதியாகதான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர்.

இதனால், கொதித்தெழுந்த தொழிலாளர்கள் முதன் முதலாக 1806-ம் ஆண்டு அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் 10 மணி நேர வேலை கேட்டு எழுப்பிய உரிமைக்குரல் அடக்கப்பட்டது. உறங்குவதாய் எண்ணப்பட்ட தொழிலாளர்களின் உரிமைக்குரல் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலித்தது.

இம்முறை தொழிலாளர்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. அதனால் அரசுப் பணியாளர்களுக்கு மட்டும் 10 மணி நேர வேலை என சட்டமியற்றப்பட்டது. இது தோல்வியல்ல, தொடங்கப்போகும் புதிய சகாப்தத்தின் தொடக்க வெற்றி என நினைத்த தொழிலாளர்களின் போராட்டம் ஓயவில்லை.

1886-ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ஒன்று பட்ட வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, சின்சினாட்டி, பால்டிமோர் என பெரும்பலான அமெரிக்க நகரங்களில் 8 மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை முன்னிறுத்தி தொழிலார்கள் வீதிக்கு வந்து போராடினர்.

சிகாகோவில் மட்டும் 70,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற கார்ல் மார்க்சின் அறைகூவலின் அர்த்தம் உணர்ந்து, அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் உலகின் முதல் தொழிலாளர் இயக்கம் உருவாக்கப்பட்டது.

தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் அமெரிக்க அரசு 1890-ம் ஆண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று பணிந்தது. இன்றும் பல நாடுகளில் தொழிலாளர்கள் சுரண்டப்படும் நிலை இருந்தாலும் அடிப்படை உரிமைகள் பெற்று தொழிலாளர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதற்காக மே ஒன்றாம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
Loading...
இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் 1923-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

Also see... வேலைநிறுத்தம் தொடரும்: மெட்ரோ ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!  

Also see... தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் விஜய்!

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...