டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து!

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, அமெரிக்க-இந்திய நட்புறவில் மிகப்பெரும் விஷயம்

Web Desk | news18
Updated: May 24, 2019, 12:10 PM IST
டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து!
மோடி, டிரம்ப்
Web Desk | news18
Updated: May 24, 2019, 12:10 PM IST
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக பிரமாண்ட வெற்றியை பெற்று, ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

தேர்தல் வெற்றிக்காக பல நாடுகளின் தலைவர்களும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Loading...அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தேர்தலில் மிகப்பெரும் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது பாஜக-வுக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, அமெரிக்க-இந்திய நட்புறவில் மிகப்பெரும் விஷயம் என்று தெரிவித்துள்ளார். நமது முக்கியமான பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள ஆர்வமுடன் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான கோ சோக் டோங், கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர், இஸ்ரேல் பிரதமர், பிரான்ஸ் அதிபர், மாலத்தீவு அதிபர், இலங்கை பிரதமர், மொரீஷியஸ் பிரதமர் ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இரு நாட்டு உறவுகளும் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, பூடான் மன்னர் ஆகியோரும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் பார்க்க :

பாஜக வெற்றிக் கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட பெண்கள்


தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...