Home /News /international /

75-வது சுதந்திர தின அமுத பெருவிழா : அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து

75-வது சுதந்திர தின அமுத பெருவிழா : அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து

75ஆவது சுதந்திர தினத்தில் உலக தலைவர்கள் வாழ்த்து

75ஆவது சுதந்திர தினத்தில் உலக தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நாட்டின் 75ஆவது சுதந்திர தினம அமுத பெருவிழா கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடியை ஏற்றி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். 75ஆவது சுதந்திர தினத்தை சுதந்திர அமுதப் பெருவிழா என்ற பெயரில் கொண்டாடிவரும் நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்து செய்தியில், இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், "அன்னல் காந்தியின் வாய்மை மற்றும் அகிம்சை என இரு கோட்பாடுகளின் வழியின் விடுதலை அடைந்த இந்தியாவின் ஜனநாயகத்திற்கு வாழ்த்துக்கள். இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நல்லுறவைப் பேணும் கூட்டாளிகளாக நீண்ட காலம் திகழ்ந்து வருகிறது.எதிர்வரும் காலங்களிலும் இந்திய அமெரிக்க நல்லுறவு தொடர்ந்து இரு நாட்டு மக்களும் அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பை அடைந்து மேம்பட்ட வாழ்வை அடைவார்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது வாழ்த்து செய்தியில், "1947ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் நேரு புதிதாக சுதந்திரம் பெற்ற இந்திய மக்கள் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.இந்த அழைப்பை ஏற்று இந்தியா இத்தகைய மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என உலகம் கற்பனை செய்திருக்காது.உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக இந்தியா அடைந்திருக்கும் சாதனைகள் ஏராளம்.

    இதையும் படிங்க: இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி

    இந்தியாவுக்கு நான் மேற்கொண்ட பயணங்கள், சந்திப்புகள் என் நினைவில் நீங்க இடம் பிடித்தவை. இந்தியா ஆஸ்திரேலியா இரு நாடுகளின் கூட்டுறவு குவாட் தொடங்கி பல்வேறு தளங்களில் சிறந்து விளங்குகிறது. இரு நாடுகளும் சமூகம், கலசாரம், பொருளாதரம், வர்த்தகம் என அனைத்து தளங்களிலும் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும் என வாழ்த்துகிறேன்" என வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

    அதேபோல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் தனது வாழ்த்து செய்தியில், "75ஆவது சுதந்திர தினத்தில் என அருமை நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.கடந்த 75 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி சுதந்திரத்தை கொண்டாடும் இந்தியாவுக்கு உறுதுணையாக பிரான்ஸ் எப்போதும் உடன் நிற்கும் என உறுதி அளிக்கிறேன்" என்றுள்ளார். இதேபோல் பல்வேறு உலக தலைவர்களும் தங்கள் வாழ்த்து செய்தியை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Emmanuel Macron, Independence day, Joe biden, PM Modi

    அடுத்த செய்தி