ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய உயிரினத்தை கண்டுபிடித்துள்ளனர், இது தோராயமாக 20,000 கால்பந்து மைதானங்கள் பரப்பளவு கொண்டது. சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானது. இது Poseidon's ribbon weed அல்லது Posidonia australis என அழைக்கப்படும் ஒரு கடல்புற்கள் ஆகும்.
பொசிடோனியா ஆஸ்ட்ராலிஸ் என்பது ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையோரங்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு கடல்புற்கள் ஆகும். Ms. Edgeloe மற்றும் அவரது சகாக்கள் ஆஸ்திரேலியாவின் ஷார்க் விரிகுடாவின் வெவ்வேறு பகுதிகளில் Posidonia புற்களின் மரபணு ஆய்வு செய்யும் போது இந்த மிகப்பெரிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் 10 வெவ்வேறு புல்வெளிகளில் இருந்து Posidonia இன் தளிர்களை சேகரித்தனர்.
ஆய்வகத்தில் புற்களின் டிஎன்ஏவை பகுப்பாய்வு செய்து ஒப்பிட்டனர். அதன் முடிவுகளை ராயல் சொசைட்டி பி இதழில் புதன்கிழமை வெளியிட்டனர்.
பொசிடோனியா கடல்புற்கள் பற்றி கூறுகையில், முதலில், விஞ்ஞானிகள் ஒரு பெரிய பகுதியில் பொசிடோனியா கடல்புற்களின் மரபணு வேறுபாடுகளைத் தேடினர். அந்த பகுதி எவ்வளவு பெரியது என்பதை ஆராய்ந்தனர். பறந்து விரிந்து கிடந்த புல் சுமார் 200 சதுர கிலோமீட்டர்கள் (77 சதுர மைல்கள்) அல்லது சுமார் 20,000 ரக்பி மைதானங்கள் அளவு பெரியது கணக்கிடப்பட்டது .
ஆராய்ச்சியாளர்கள் மரபணு வேறுபாடுகளைக் கொண்ட தாவரங்களைப் பெற முயன்றனர், மேலும் அவர்கள் 110 மைல்களுக்கு அப்பால் எடுக்கப்பட்ட 116 மாதிரிகளை சேகரித்தனர். பல்வேறு மாதிரிகளில் மொத்தம் 18,000 மரபணுக்களை ஆய்வு செய்தனர்.
இந்த மொத்த தாவரத்தின் கிளைவேர்களும் பரப்பப்பட்ட வேர்த்தண்டு அமைப்பைக் கொண்டுள்ளது. 200 சதுர கி.மீ ஒரே விதையில் இருந்து வளர்ந்து விரிந்துள்ளது. அதனால் தான் இது ஒற்றை பெரிய தாவரமாக இருக்கிறது என்று எட்ஜெலோ விளக்குக்கிறார்.
பொசிடோனியா புற்களின் வேர்த்தண்டுக்கிழங்குகள் ஆண்டுக்கு 35 சென்டிமீட்டர் (13.7 அங்குலம்) வரை வளரக்கூடியவை, அந்த விகிதத்தைப் பயன்படுத்தி, இந்த அளவு பரவுவதற்கு குறைந்தது 4,500 ஆண்டுகள் தேவைப்படும் என்று ஆசிரியர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
பொசிடோனியா புல் பல வழிகளில் தனித்துவமானது. சுறா விரிகுடாவின் அமைப்பு சவாலானவை. வளைகுடாவில் மற்ற இடங்களை விட உப்புத்தன்மை இரட்டிப்பாக இருக்கும் பகுதிகளில் உயிர்வாழ தனித்துவமான ஒரு வழியை இந்த புற்கள் கண்டறிந்துள்ளது. 15C வரை குளிர் மற்றும் 30C வரை வெப்பமான நீர் வெப்பநிலையிலும் செழித்து வளரும்.
ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணர் டாக்டர். மார்ட்டின் ப்ரீட் கூறுகையில், இந்த புல்லினம் "இனப்பெருக்கம் செய்யாது" ஆனால் இவ்வளவு காலம் உயிர் பிழைத்தது ஒரு புதிர். "இனப்பெருக்கம் இல்லாத தாவரங்கள் மரபணு வேறுபாட்டைக் குறைக்கின்றன, அவை சுற்றுச்சூழல் மாற்றத்தைக் கையாளும் போது தேவைப்படும்," என்று அவர் கூறினார்.
Published by:Ilakkiya GP
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.