ஹோம் /நியூஸ் /உலகம் /

ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை

ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை

புதிய வகை கொரோனா திரிபான ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

புதிய வகை கொரோனா திரிபான ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

புதிய வகை கொரோனா திரிபான ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய திரிபான ஓமைக்ரான், உலக அளவில் பரவக் கூடியது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான திரிபுகளை ஒமைக்ரான் கொண்டுள்ளதாகவும், பெருந்தொற்றின் பாதையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

  ஒமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை உயிரிழக்கவில்லை என்றாலும், இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேட்டுக்கொண்டுள்ளார்.

  புதிய மாறுபாட்டைக் கண்டறிந்து, வரிசைப்படுத்தி, புகாரளித்ததற்காக தென்னாப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானா நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் திரிபு தற்போது போட்ஸ்வானா, இத்தாலி, ஹாங்காங், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மனி, கனடா, இஸ்ரேல் மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு பரவியுள்ளது.

  இதனை தொடர்ந்து பல நாடுகள் விமான சேவைக்கு தடை விதித்துள்ளன. ஜப்பான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் வெளிநாட்டினருக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளன. டிசம்பர் மாதத்திலிருந்து விமான சேவையை தொடங்க திட்டமிட்டிருந்த ஆஸ்திரேலியா அத்திட்டத்தை ஒத்தி வைத்துள்ளது.

  Must Read : தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல்

  ஒமைக்ரான் பரவியுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கட்டாய ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: CoronaVirus, Omicron, WHO