கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம், ஏழை நாடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்ல வேண்டிய தடுப்பு மருந்துகள், சில பணக்கார நாடுகளில் உள்ள ஆரோக்கியமான இளைஞர்களுக்கு செலுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார். ஒவ்வொரு நாட்டிற்கும் கொரோனா தடுப்பு மருந்துகளை சம அளவில் விநியோகிக்க வேண்டும் என்று, தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு டெட்ரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. தற்போது, சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது. அதன்தொடர்ச்சியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.