தானிய உற்பத்தியில் சாதித்தாலும், உணவு விலை கடுமையாக உயர்ந்துள்ளது: உலக வேளாண் அமைப்பு கவலை

அதிகரிக்கும் உணவு விலைகள். | மாதிரிப்படம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான காலக்கட்டத்தில் இல்லாத அளவுக்கு உணவு விலைகள் கடுமையாக மே மாதத்தில் அதிகரித்துள்ளதாக உலக வேளாண் அமைப்பு கூறியுள்ளது.

 • Share this:
  கடந்த 10 ஆண்டுகளுக்கும் கூடுதலான காலக்கட்டத்தில் இல்லாத அளவுக்கு உணவு விலைகள் கடுமையாக மே மாதத்தில் அதிகரித்துள்ளதாக உலக வேளாண் அமைப்பு கூறியுள்ளது.

  அதாவது தானியங்களின் உற்பத்தி சாதனை அளவை எட்டிய போதும் உணவுப்பண்டங்களின் விலைகள் கடுமையாக அதிகரித்து வருவதாக ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது.

  உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உணவு விலைக் குறியீடு மே மாதம் 127.1 புள்ளிகள் என்று காட்டுகிறது. ஏப்ரலை விட அதிகம், கடந்த 2020 மே மாதத்தை விட 39.7% அதிகம்.

  குறிப்பாக சமையல் எண்ணெய்கள், சர்க்கரை, மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. 2011-க்குப் பிறகு உணவு விலைக்குறியீட்டில் இந்த அத்தியாவசிய பண்டங்களின் விலை அதிகமாகியுள்ளன. தானிய விலை குறியீடு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும் போது 6% அதிகரித்துள்ளது. சோளம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் மே இறுதியில் அமெரிக்காவில் சோள உற்பத்தி அதிகரிப்பால் சோளத்தின் விலை கொஞ்சம் குறைந்தது.

  Also Read:  Donald Trump : நான் தான் அப்போதே சொன்னேனே.. கொரோனா சீனாவின் வூகான் லேபிலிருந்து பரவியது என்று- டிரம்ப் இப்போதும் திட்டவட்டம்

  கோதுமை விலையும் மே மாதத்தில் அதிகரித்துள்ளது. ஆனால் அரசி விலை சீராக உள்ளது. பாமாயில் சோயா ஆயில் உள்ளிட்ட வெஜிடபுள் ஆயில் விலைகள் குறியீட்டில் கடுமையாக ஏறியுள்ளன. தெற்காசிய நாடுகளின் இதன் உற்பத்தி குறைந்ததால் விலை ஏறியுள்ளது. பயோடீசல் பிரிவில் சோயா எண்ணெய்க்கு இருக்கும் கிராக்கியினால் இதன் விலை உயர்ந்துள்ளது.

  சர்க்கரை விலைக் குறியீடு 6.8% அதிகரித்துள்ளது. இது எதனால் என்றால் கரும்பு அறுவடை தாமதங்களினால் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறுகிறது. உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி நாடான பிரேசிலில் உற்பத்தி குறைவது கவலை அளிக்கும் அம்சமாகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இறைச்சி விலைக் குறியீடு ஏப்ரல் மாதத்தை விட 2.2% அதிகரித்துள்ளது. காரணம் சீனாவில் இறக்குமதி அதிகரிப்பே. பால்பொருட்கள் விலைக் குறியீடு 1.8% அதிகரித்துள்ளது.

  இவ்வாறு உலக வேளாண் அமைப்பு தன் அறிவிப்பில் கூறியுள்ளது.
  Published by:Muthukumar
  First published: