முகப்பு /செய்தி /உலகம் / நொய்டா இரட்டை கோபுரங்கள் போல் உலகளவில் தகர்க்கப்பட்ட புகழ்பெற்ற கட்டடங்கள் பற்றி தெரியுமா?

நொய்டா இரட்டை கோபுரங்கள் போல் உலகளவில் தகர்க்கப்பட்ட புகழ்பெற்ற கட்டடங்கள் பற்றி தெரியுமா?

கட்டிடம் தகர்ப்பு

கட்டிடம் தகர்ப்பு

Noida twin tower demolish: நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக இரட்டை கோபுரங்கள் இன்று அருவி உள்வெடிப்பு முறையில் தகர்ப்பட்டது. இதேபோல், உலகளவில் தகர்ப்பட்ட புகழ்பெற்ற கட்டிடங்களை பற்றி தெரியுமா?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Noida, India

அண்மையில்  இடிக்கப்பட்ட மிகவும் பிரபலமான கட்டிடங்களில் டிரம்ப் பிளாசாவும் ஒன்று. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் சிட்டியில் இந்த  34 மாடி கட்டிடம் ஹோட்டல் மற்றும் கேசினோவாக இயங்கி வந்தது. 1984 இல் திறக்கப்பட்ட கட்டிடம், அதன் மோசமான நிலை காரணமாக  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் . 3,000 டைனமைட் குச்சிகளைப் பயன்படுத்தி  30 விநாடிகளில் தகர்க்கப்பட்டது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்  இருந்த  ஓஷன் டவரின் கட்டுமான பணிகள்  2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 31 மாடிகள் உயரமுள்ள கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட  தொடங்கின. அடிதளத்தில்  ஆறு அங்குலங்கள் மூழ்கியது.  கட்டடத்தை  புதுப்பிக்கும் பணி சாத்தியமில்லாததால் 2009 ஆம் ஆண்டில்  இடிக்கப்பட்டது.

31 மாடிகளை கொண்டிருந்த  AfE டவர், ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் கட்டப்பட்டது  ஐரோப்பாவில் இதுவரை இடிக்கப்பட்ட மிக உயரமான கட்டிடம் இதுவாகும். 1970 களின் முற்பகுதியில் கட்டப்பட்ட இந்த வானளாவிய கட்டிடம்  2014-ல்  950 கிலோ வெடிமருந்தை பயன்படுத்தி வெறும் 10 வினாடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது.

துபாயில் கட்டடப்பட்ட  மினா  பிளாசாவின்  கட்டுமானம் 2007- ஆம் ஆண்டு தொடங்கியது. 144 தளங்கள் மற்றும் நான்கு கோபுரங்களின் கட்டப்பட்ட பிறகும்  பணிகள் முழுமையடையவில்லை. இதனால் அந்த இடத்தில் வேறு கட்டடம் கட்ட   முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து  பத்து வினாடிகளில் 6,000 கிலோ வெடிமருந்துகளைப் பயன்படுத்தி கட்டடம் தகர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: பீட்சா மீது இப்படியொரு காதலா.. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அமெரிக்க பெண்!

சீனாவின் சியான் நகரில் இருந்த  கோல்டன் பிளவர் கட்டிடம், 387 அடி உயரம் கொண்டது. அதன் கட்டுமானம் 1996 இல் நிறைவடைந்த பிறகும்  10 ஆண்டுகளாக  பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.  கட்டடத்தை  புதுப்பிக்க நிதி இல்லாததால் 1 புள்ளி 4 டன் டைனமைட்டைப் பயன்படுத்தி இடிக்கப்பட்டது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் பிரைட்டன் பாயின்ட்  என்ற மின் நிலையம் 1960 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.  அதன் இரண்டு குளிரூட்டும் கோபுரங்கள் 2019 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டன.  500 அடி உயரத்தில்,  மிக உயரமான குளிரூட்டும் கோபுரங்கள் என்ற சாதனையை அவை படைத்திருந்தன

டெக்சாஸில் இருந்த  லேண்ட்மார்க் டவர், 1957- ல் கட்டி முடிக்கப்பட்டது, இது 380 அடி உயரம் கொண்ட ஃபோர்ட் வொர்த் நகரத்தின் மிக உயரமான கட்டிடமாகும். சூறாவளியால் தாக்கப்பட்ட பின்னர்,  2003- ஆம் ஆண்டு  வெறும் 163 கிலோ வெடிமருந்துகளை பயன்படுத்தி இடித்து தள்ளப்பட்டது. சிகாகோவில் உள்ள மோரிசன் ஹோட்டல் 1925 இல் கட்டி முடிக்கப்பட்டது. பயன்பாட்டில் இருந்த அக்கட்டடம்  1965 இல் தேசிய வங்கி கட்டிடம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது.  நியூயார்க்கிற்கு வெளியே, 40 மாடிகளுக்கு மேல் அமைந்த முதல் கட்டடம் இது என்ற பெயரை பெற்றிருந்தது.

First published:

Tags: Buildings, Noida Twin Tower