’உயிரினங்களைக் காப்போம்...’- 49-வது உலக பூமி தினம்!

பூமியின் பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்யவேண்டுமென ஐநா இந்தத் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

Web Desk | news18
Updated: April 22, 2019, 4:26 PM IST
’உயிரினங்களைக் காப்போம்...’- 49-வது உலக பூமி தினம்!
கூகுள் டூடுள்
Web Desk | news18
Updated: April 22, 2019, 4:26 PM IST
பூமியையும் பூமியில் உள்ள உயிரினங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் உலக பூமி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

’நமது உயிரினங்களைக் காப்போம்’ என்பதே 2019-ம் ஆண்டுக்கான கருத்தாக உள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் உலக பூமி தினம் ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பூமியைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே ‘பூமி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

1969-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா நகரை ஒட்டிய கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய கொடூர நிகழ்வின் தாக்கமாக 1970-ம் ஆண்டு அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்து சுகாதாரமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டுமென என கடலோரமாகவே ஊர்வலம் சென்றனர்.


அந்த ஆண்டிலிருந்து உலக பூமி தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பூமியின் பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்யவேண்டுமென ஐநா இந்தத் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதற்காக கூகுள் கூட ஒரு சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது கவனத்திற்குரியது.Loading...

மேலும் பார்க்க: சென்னையில் தலைவிரித்து ஆடும் தண்ணீர் பஞ்சம்
First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...