Home /News /international /

உலக நாடுகளில் கொரோனாவுக்கு எந்தெந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன?

உலக நாடுகளில் கொரோனாவுக்கு எந்தெந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன?

மாடர்னாவின் கொரொனா தடுப்பூசி

மாடர்னாவின் கொரொனா தடுப்பூசி

உலகின் பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. எந்தெந்த நாடுகள் எந்தெந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளன என்பதை தற்போது காணலாம்...

    கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் ஃபைசர், ஜெர்மனியின் பயோன்டெக் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசிக்கு பல்வேறு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

    இதன்படி, அமெரிக்கா, பிரிட்டன், பஹ்ரைன், கனடா, மெக்சிகோ, சிங்கப்பூர், ஓமன், சவுதி அரேபியா, குவைத், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் இந்த மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மாடெர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

    கொரோனா தொற்று முதலாவதாக உருவான சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள சினோவாக், சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகள், சீனாவில் செலுத்தப்பட்டு வருகின்றன. சீனாவைச் சேர்ந்த பெய்ஜிங் கல்வி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசிக்கு சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

    ரஷ்யாவைச் சேர்ந்த கமலேயா, உயிரி தொழில்நுட்பம் மற்றும் வைரஸ் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தடுப்பு மருந்துகள் ரஷ்ய மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. உலக அளவில் இதுவரை  1,15,00,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, சீனாவில் 45 லட்சம் பேரும், அமெரிக்காவில் 42 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona vaccine, Corona virus

    அடுத்த செய்தி