ஆஸ்ட்ராஜெனிகாவின் கொரோனா தடுப்பூசியில் ரத்தம் உறைதல் பிரச்னை: தடைவிதிக்கும் உலக நாடுகள் - இந்தியாவில் கோவிஷீல்டு நிலை என்ன?

ஆஸ்ட்ராஜெனிகாவின் கொரோனா தடுப்பூசியில் ரத்தம் உறைதல் பிரச்னை: தடைவிதிக்கும் உலக நாடுகள் - இந்தியாவில் கோவிஷீல்டு நிலை என்ன?

கொரோனா தடுப்பூசி(மாதிரிப் படம்)

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்துக்கு உலக நாடுகள் தடைவிதித்துவருகின்றன.

 • Share this:
  நார்வே, டென்மார்க்கைத் தொடர்ந்து ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்கு ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தற்காலிக தடை விதித்துள்ளன. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கின. பலகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு ஆஸ்ட்ராஜெனகா மருந்தை பல நாடுகளும் அவசர பயன்பாட்டுக்கு அனுமதித்தன.

  உலகம் முழுவதும் 35 கோடி பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, ஆஸ்திரியா நாடுகளில் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு ரத்தம் உறைதல் புகார்கள் எழுந்தன. இந்த நாடுகளில் கடந்த 14ம் தேதி வரை 22 பேருக்கு ரத்தம் உறைதல் புகார் பதிவாகின. ஆஸ்திரியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட செவிலியர் ஒருவரும் சில நாட்களில் உயிரிழந்தார். இதனையடுத்து டென்மார்க், நார்வே, ஆஸ்திரியாவில் தற்காலிகமாக இந்த தடுப்பூசிக்கு 2 வார தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இந்தநிலையில், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் ரத்தம் உறைதல் புகார்கள் குறைந்த அளவில் பதிவாகியுள்ளன. இதனால் இந்த நாடுகளிலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆஸ்ட்ராஜெனிகா மருந்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

  ரத்தம் உறைதல் புகார்கள் இருந்தாலும் கொரோனா தடுப்பூசியை தடை செய்யவேண்டாம் என்றும் உலகசுகாதார மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

  ஆஸ்ட்ராஜெனகா மருந்தின் பாதுகாப்பு மற்றும் ரத்தம் உறைதல் புகார் குறித்து உலக சுகாதார அமைப்பு அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இதே மருந்து இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் ரத்தம் உறைதல் புகார் எழுந்துள்ள நிலையில், இந்த பிரச்னை குறித்து விரிவான ஆய்வு இந்தியாவில் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இந்தியாவில் இந்த தடுப்பூசியால் பாதிக்கப்பட்டோரின் அளவு 0.02 விழுக்காடு மட்டுமே என்றும், இந்தியாவில் தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பிரச்னையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


  உடனடி செய்தி இணைந்திருங்கள்...
  Published by:Karthick S
  First published: