World Biofuel Day | காலநிலை மாற்றத்தை தவிர்க்க தாவர அடிப்படையிலான எரிபொருள் உருவான வரலாறு!

பயோஃபியூயல் என்பது விவசாய கழிவுகள், பயிர்கள், மரங்கள் அல்லது புல் போன்ற உயிரியல் பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு ஆற்றல் மூலமாகும்.

பயோஃபியூயல் என்பது விவசாய கழிவுகள், பயிர்கள், மரங்கள் அல்லது புல் போன்ற உயிரியல் பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு ஆற்றல் மூலமாகும்.

  • Share this:
ஆகஸ்ட் 10ம் தேதி உலக பயோஃபியூயல் தினம் கொண்டாடப்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக செயல்படக்கூடிய, வழக்கத்திற்கு மாறான எரிபொருளின் ஆதாரங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த தாவர எரிபொருள்கள் புதுப்பிக்கத்தக்க, மக்கும் நிலை கொண்ட மற்றும் நிலையான ஆற்றல் ஆதாரங்கள் ஆகும். தாவர அடிப்படையிலான எரிபொருளின் உதவியுடன், ஒருவர் கச்சா எண்ணெய்யின் இறக்குமதியைக் குறைப்பது மட்டுமல்லாமல், தூய்மையான அமைப்பை வரவேற்க வழிவகுக்கலாம்.

பயோஃபியூயல் என்பது விவசாய கழிவுகள், பயிர்கள், மரங்கள் அல்லது புல் போன்ற உயிரியல் பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு ஆற்றல் மூலமாகும். தாவரங்களைப் போல விரைவாக புத்துயிர் பெறக்கூடிய எந்தஒரு கார்பன் மூலத்திலிருந்தும் பயோஃபியூயலை தயாரிக்க முடியும். வழக்கமான புதைபடிவ எரிபொருள்களுடன் ஒப்பிடும்போது, ​​இந்த தாவர அடிப்படையிலான எரிபொருட்களில் சல்பர் இல்லை. மேலும் கார்பன் மோனாக்சைடு மற்றும் நச்சு உமிழ்வை குறைந்த அளவே வெளிப்படுத்துகின்றன.

உலக பயோஃபியூயல் தினம் தோன்றிய வரலாறு:

1893ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அன்று டீசல் எஞ்சின் கண்டுபிடிப்பாளரான சர் ருடால்ப் டீசல் முதல் முறையாக வேர்க்கடலை எண்ணெயுடன் மெக்கானிக்கல் இயந்திரத்தை திறம்பட இயக்கினார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 10 உலக பயோஃபியூயல் நாளாகக் குறிக்கப்படுகிறது. இதன் மூலம் தாவர எரிபொருள், அடுத்தடுத்த நூற்றாண்டில் முற்றிலும் மாறுபட்ட மெக்கானிக்கல் இயந்திரங்களுடன் புதைபடிவ எரிபொருட்களுக்கு பதிலாக வாயுவாக மாறும் என்று அவரது சோதனை கணித்துள்ளது. இந்த பரிசோதனையை நினைவுக்கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

Must Read | திருநம்பி, திருநங்கைகளுக்காக தமிழகத்தின் முதல் கட்டணமில்லா விடுதி! குவியும் பாராட்டு

இந்த தினத்தின் முக்கியத்துவம் என்ன?

இந்த நாளில் அரசாங்கமும் தனியார் அமைப்புகளும் ஒன்றிணைந்து புதைபடிவமல்லாத எரிபொருட்களின் ஆற்றலை வளமாக வேறுபடுத்தி காண்பிக்க முயற்சி செய்து வருகின்றன. 2019ஆம் ஆண்டில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம், சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து, 'பயன்படுத்திய சமையல் எண்ணெய்யின் மறுபயன்பாடு' என்ற முயற்சியைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் இருந்து ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை சேகரித்து கலவைக்காக பயோடீசல் ஆலைகளுக்கு அனுப்புகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த தினத்திற்கான கருப்பொருள் என்ன?

முன்னதாக கடந்த ஜூன் மாதம், பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். விவசாயிகளுடன் எத்தனால் மற்றும் பயோகேஸ் பயன்படுத்துவதற்கான அனுபவங்களை பற்றி கேட்டறிந்த பிரதமர், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருளாக "சிறந்த சூழலுக்கு தாவர எரிபொருட்களை பயன்படுத்த வேண்டும்" என்று அறிவித்தார். அதன் படி ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
Published by:Archana R
First published: