ஹோம் /நியூஸ் /உலகம் /

உலகின் சிறந்த ஏர்லைன்ஸ் விருதை 7வது முறையாக வென்ற கத்தார் ஏர்வேஸ்

உலகின் சிறந்த ஏர்லைன்ஸ் விருதை 7வது முறையாக வென்ற கத்தார் ஏர்வேஸ்

கத்தார் ஏர்வேஸ்

கத்தார் ஏர்வேஸ்

Qatar Airways | உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் 7வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரிட்டனைச் சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் ஆய்வு நிறுவனம் ஆண்டு தோறும் உலகின் சிறந்த விமான சேவை நிறுவனங்களை தேர்வு செய்து விருது அளித்து கெளரவித்து வருகிறது. ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் வழங்கும் இந்த விருது விமான சேவை துறையின் ஆஸ்கர் பரிசு என புகழப்படும் அளவிற்கு பிரபலமானது. விமான சேவையின் தரம், சேவை, நிலைத்தன்மை, புதிய வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் வரை 100 நாடுகளைச் சேர்ந்த 1.4 கோடி விமான பயணிகளிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் சிறந்த விமான சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஆண்டுக்கான “ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன் விருதுகள் 2022” பட்டியலில் முதலிடத்தில் கத்தார் ஏர்வேஸும், இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸும், மூன்றாவது இடத்தில் எமிரேஸ் ஏர்வேஸும் இடம் பிடித்துள்ளது.

7வது முறையாக வென்ற கத்தார் ஏர்வேஸ்:

உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனமாக முதலிடம் பிடித்துள்ள கத்தார் ஏர்வேஸ், சிறந்த பிசினஸ் கிளாஸ், சிறந்த இருக்கை மற்றும் வணிக வகுப்பு லவுஞ்சில் சிறந்த உணவு உட்பட எட்டு கூடுதல் விருதுகளையும் பெற்றுள்ளது.

இது தவிர, இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏர்லைன் ரேட்டிங்ஸ் என்ற இணையதளம், கத்தார் ஏர்வேஸை அதன் கேபின் கண்டுபிடிப்பு, பயணிகள் சேவை மற்றும் கோவிட் தொற்றுநோய் முழுவதும் தொடர்ந்து செயல்படுவதற்கான உறுதியை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டின் சிறந்த விமான நிறுவனமாக தேர்வு செய்திருந்தது.

Also Read : செவ்வாய் கிரகத்திற்கு இதுவரை 7,000 கிலோ கழிவுகளை கொண்டு சேர்த்த மனிதன்..ஆய்வில் அதிர்ச்சி தகவல்

லண்டனில் உள்ள Langham ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதினைப் பெற்ற கத்தார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "ஏழாவது முறையாக 2022 ஆம் ஆண்டின் ஸ்கைட்ராக்ஸ் விருது பெறும் சிறந்த விமான நிறுவனமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். கத்தார் ஏர்வேஸைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி, உங்கள் வாக்குகள் எங்களை உலக அளவில் பெருமைப்பட வைத்துள்ளது” என பதிவிட்டுள்ளது.

25ம் ஆண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 7வது முறையாக விருது கிடைத்துள்ளது குறித்து கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பேக்கர் கூறுகையில் "கத்தார் ஏர்வேஸ் உருவாக்கப்பட்டபோது உலகின் சிறந்த விமான நிறுவனம் என்று பெயரிடப்பட வேண்டும் என்பது எப்போதும் ஒரு குறிக்கோளாக இருந்தது, ஆனால் ஏழாவது முறையாக அதை வென்று மூன்று கூடுதல் விருதுகளைப் பெறுவது அனைத்து ஊழியர்களின் கடின உழைப்பிற்கும் ஒரு சிறந்த சான்றாகும். கத்தார் ஏர்வேஸ் உடன் பயணிக்கும் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தைப் தருவதை உறுதி செய்வதே எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் உந்துதல் ஆகும்” என தெரிவித்துள்ளார்.

Also Read : பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகிவரும் 'குழந்தை' தீவு !

இந்தியாவின் சிறந்த விமான நிறுவன விருதையும், தெற்காசியாவின் சிறந்த விமான விருதையும் டாடா குழுமத்திற்குச் சொந்தமான விஸ்தாரா நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Flight, Tamil News