ஹோம் /நியூஸ் /உலகம் /

BitCoin: எல் சால்வடாரின் பிட்காயின் நடைமுறை.. ஒத்துழைக்க உலக வங்கி மறுப்பு

BitCoin: எல் சால்வடாரின் பிட்காயின் நடைமுறை.. ஒத்துழைக்க உலக வங்கி மறுப்பு

பிட் காயின்

பிட் காயின்

உலக வங்கி, வெளிப்படைத்தன்மை இல்லாத நாணய பரிமாற்றத்துக்கு உதவ முடியாது என கூறியுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் பிட்காயினை, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் அதிபர் நயீப் புக்கேலே கடந்த வாரம் பேசும்போது, அமெரிக்க டாலருடன் சேர்ந்து, பிட்காயினையும் அதிகாரப்பூர்வ நாணயமாக பயன்படுத்த இருப்பதாக தெரிவித்தார். இதற்காக நாடாளுமன்றத்திலும் ஒப்பதல் அளிக்கப்பட்டு, 90 நாட்களில் அரசாணை வெளியிடவும் எல் சால்வடார் முடிவு செய்துள்ளது. மேலும், பிட்காயினை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்த உலக வங்கியை நாடிய அந்நாட்டு அரசு தொழில்நுட்ப ரீதியாக உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

இது குறித்து பேசிய எல்சால்வடார் நாட்டின் நிதி அமைச்சர் அலெஜான்ட்ரோ ஜெலயா, நாட்டில் பிட்காயினை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான உதவியை உலக வங்கியிடம் கேட்டிருப்பதாக கூறினார்.

அமெரிக்க டாலருடன், பிட்காயினும் நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக இருக்கும் எனக் கூறிய அவர், இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியகமும் ஒப்புதல் அளித்திருப்பதாக கூறினார். ஆனால், சர்வதேச நிதியகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கத்தில், எல்சால்வடார் பிட்காயினை பணப்பரிமாற்றத்துக்கு பயன்படுத்துவதில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தது.

Also Read:   புதிய படத்தில் பவித்ரா லக்ஷ்மி! பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்

இந்நிலையில், உலக வங்கி கொடுத்துள்ள விளக்கத்தில் எல்சால்வடாருக்கு தேவையான நாணய வெளிப்படைத்தன்மை மற்றும் அதனை முறைப்படுத்தும் வழிமுறைகளுக்கு உதவியாக இருக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது. அதேநேரத்தில், நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்டுள்ள பிட்காயினை முறைப்படுத்துவதற்கு தங்களால் இயலாது என்றும் கூறியுள்ளது. எல்சால்வடார் அரசு பிட்காயினை முறைப்படுத்துவதற்காக தங்களை அனுகியதாக தெரிவித்துள்ள உலக வங்கி, வெளிப்படைத்தன்மை இல்லாத நாணய பரிமாற்றத்துக்கு உதவ முடியாது என கூறியுள்ளது.

எல்சால்வடார் நிதியமைச்சர் அலெஜான்ட்ரோ ஜெலயா பேசும்போது, சர்வதேச நாணய நிதியம், தங்கள் நாடு பயன்படுத்துவதற்கு எதிராக இல்லை எனவும், நடைமுறைப்படுத்துவதற்கு மட்டுமே ஒப்புதல் வழங்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Also Read:     தந்தையின் இறப்பிற்கு காரில் சென்ற போது ஆர்ஜே ஆனந்தி செய்த காரியம்.. சமூக வலைத்தளங்களில் விவாதம்!

பிட்காயினை முறைப்படி ஏற்றுக்கொள்வது என்பது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து வேகமான அனுகுமுறையை எதிர்பார்க்க முடியாது என நியூயார்க்கில் உள்ள லத்தீன் அமெரிக்க வருவாய் நிபுணராக இருக்கக்கூடிய ஷியோபான் மோர்டன் தெரிவித்துள்ளார். நிச்சயமற்ற மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத இருக்கும் பிட்காயின், அமெரிக்காவின் ராஜதந்திர கொள்கையுடன் போட்டிப்போட முடியுமா? என்றெல்லாம் கவனிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல் சால்வடாரின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள மோர்டான், எல்சால்வடார் அதிபரின் முடிவு தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்கு மட்டுமே சாத்தியம், நடைமுறையில் அதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை என விளக்கம் அளித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு, கொள்கை மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை பூர்த்தி செய்யும் அளவுக்கு பிட்காயின் பரிமாற்றம் நம்பத்தகுந்ததாக இல்லை எனவும் மோர்டான் தெரிவித்துள்ளார்.

Published by:Arun
First published:

Tags: Bitcoin, World Bank