ஹோம் /நியூஸ் /உலகம் /

இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் இல்லை - உலக வங்கி

இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் இல்லை - உலக வங்கி

இலங்கை

இலங்கை

Sri Lanka: இலங்கையின் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார நிலைத்தன்மைக்கான சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம் - உலக வங்கி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தற்போதைக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் மக்கள் புரட்சியை அடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து  ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இதையடுத்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச அமைப்புகளிடம் உதவிகளைப் பெற  இலங்கை தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய நிலையில் இலங்கைக்கு புதிதாக நிதியுதவி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார நிலைத்தன்மைக்கான சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகே நிதியுதவி வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்காக, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கடன் தொகையை பயன்படுத்தி வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Financial crisis, Sri Lanka, Sri Lanka political crisis, World Bank