• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!

கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!

உலக வங்கி

உலக வங்கி

ஏழைகளும், அவர்களைக் கொண்டிருக்கும் நாடுகளும் கடினமான சவால்களை மேற்கொள்ள இருப்பதால் உலக வங்கி இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறது என்று உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் டேவிட் மால்பாஸ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    உலக வங்கி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பதற்காக அவசர நிதியாக 1 பில்லியன் டாலர் நிதியினை வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

    உலக வங்கியின் மொத்த முதலுதவி நிதியான 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் , 25 நாடுகளுக்கு உதவ இருக்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதை வைத்து கொரோனாவை தடுக்கும் புதிய முயற்சிகளில் முன்னேறி வருகின்றன என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கும் இந்த அவசர  நிதியில் பெரும்பங்கு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

    தொற்று இருப்பவர்களைக் கண்டறிதல், பரிசோதனை, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குதல், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த நிதி உதவும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு உலக வங்கி 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலுதவி நிதியாக வழங்க உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களும், மாலத்தீவுக்கு 7.3 மில்லியன் அமெரிக்க டாலர்களும், இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டாலர்களும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
     உலக நாடுகளின் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, அடுத்த 15 மாதங்களில் 160 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியினை உலக வங்கி வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது.




    “வளரும் நாடுகளின் கட்டமைப்பை வலுப்படுத்த நாங்கள் கடின முயற்சியை எடுத்து வருகிறோம்.  மக்களை தொற்று நோயிலிருந்து மீட்பது மட்டுமில்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும் உதவும். ஏழைகளும், அவர்களைக் கொண்டிருக்கும் நாடுகளும் கடினமான சவால்களை மேற்கொள்ள இருப்பதால் உலக வங்கி இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறது” என்று உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் டேவிட் மால்பாஸ் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: