Home /News /international /

ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு தடைவிதித்த உலக தடகள அமைப்பு

ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு தடைவிதித்த உலக தடகள அமைப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் தடகள வீரர்களுக்கு தடை விதிப்பதாக உலக தடகள அமைப்பின் தலைவர் செபாஸ்டியன் கோ தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்துவந்தது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உக்ரைன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனையடுத்து, உக்ரைன் நாட்டைச் சுற்றி ராணுவத்தை நிறுத்தியது ரஷ்யா. அதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதல் தொடர்ந்தது. இது உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாகியது. அதனையடுத்து, ரஷ்யாவின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன.

    ரஷ்யாவின் செயல்பாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்துவருகிறது. இந்த போரின் காரணமாக உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா இந்த பயங்கரமான தாக்குதலின் காரணமாக இதுவரையில், 5,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள் ஆவர்.

    பொதுமக்களுக்கு 3,00-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ரஷ்யா நாட்டுத் தரப்பிலும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைன் மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைன் மீதான போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷோய்கு தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் கடும் கண்டனங்களுக்குப் பிறகு ரஷ்யா ராணுவத் தாக்குதலிலிருந்து பின்வாங்கவில்லை.

    ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்தநிலையில், உலக தடகள அமைப்பு ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. உலக தடகள அமைப்பின் தலைவர் செபஸ்டியன் கோய் அறிவிப்பில், ‘உலக தடகள அமைப்பின் கீழ் நடைபெறும் அனைத்துவகையான போட்டிகளிலிலும் ரஷ்ய வீரர்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது.

    எங்களுடைய இலக்கை அடையும்வரை போர் தொடரும்- ரஷ்யா உறுதி

    ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் அனைத்து தடகள வீரர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் வரும் காலங்களில் நடைபெறவுள்ள தடகள போட்டிகளிலில் பங்கேற்க தடைவிதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. உலக தடகள சாம்பியன்ஷிப் ஒரேகான் 22, உலக தடகள உள்விளையாட்டு சாம்பியன்ஷிப் பெல்க்ரேட் 22, உலக தடகள விரைவு நடை குழு சாம்பியன்ஷிப் மஸ்கட் 22 ஆகிய தொடர்களிலிலும் தடைவிதிக்கப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி