செய்திகளில் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை நோக்கி வருகிறது, விண்கல் அல்லது சிறுகோள் பூமியை தாக்கும் என்ற பார்த்திருக்கிறோம். இதுவரை விண்கற்களால் பூமிக்கு மிக பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் விண்கல் தாக்குதல் எப்பொழுதுமே அச்சுறுத்தக் கூடியதாகத்தான் இருக்கிறது. எனவேதான் விண்கல்லின் தாக்கம் பூமியின் மீது எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஜூன் 30 ஆம் தேதி விண்கல தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிஜம் அச்சுறுத்தக்கூடியதாக இருந்தாலும் கற்பனைக்கு எல்லை இல்லை! அந்தவரிசையில் பூமியை அறிவு பாதிக்கு பூமியை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த விண்கல் மற்றும் எரிகற்கள் சார்ந்த பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அறிவியல் புனைவுகள் அதாவது சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களை மக்கள் பெரிதும் விரும்பி பார்ப்பார்கள். குறிப்பாக யுனிவர்சல் திரைப்படங்கள் என்று உலகம் முழுவதும் வெளியிடப்படும் திரைப்படங்களில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைப்பது சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்கள் தான். குறிப்பாக பூமிக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அல்லது பூமியின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விண்கல் சார்ந்த படங்கள் உலகம் முழுவதிலுமே மக்களின் விருப்பமான படங்களாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் தேதி உலக விண்கல் தினமாக கொண்டாடப்படுகிறது. அதில் நீங்கள் பார்க்க வேண்டிய ஆறு திரைப்படங்களின் பட்டியல் இங்கே.
1.ஆர்மகெடான் :
1998 ஆம் ஆண்டு வெளியான ஆர்மகேடான் திரைப்படத்தை, மைக்கேல் பே இயக்கியுள்ளார். இப்படத்தில் புரூஸ் வில்லிஸ், பில்லி பாப் தோர்ன்டன் மற்றும் பென் அஃப்லெக் போன்ற பிரபலமான நடிகர்கள் நடித்தனர்.அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தின் அளவில் ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்து பெரும் அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டதும், நாசா ஒரு குழுவை ஒன்றிணைத்து பேரழிவு ஏற்படாமல் தடுக்கவும், மாற்றவும் போராடுவது தான் படத்தின் கதை. இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும், எவர்கிரீன் படங்களில் இப்படம் என்றும் இடம் பெற்றிருக்கும்
2. டீப் இம்பாக்ட்
ஆர்மகெடான் வெளியான அதே ஆண்டான 1998 இல், ஒரு வால் நட்சத்திரம் பூமியை நோக்கி மோதும் பாதையில் செல்லக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால், மனித இனம் மிக மோசமான நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற கதையம்சத்தோடு, இந்தப் படத்தை இயக்குநர் மிமி லெடர் உருவாக்கினார்.படத்தில் ராபர்ட் டுவால், டீ லியோனி, எலிஜா வுட், மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
3.ஆஸ்டிராய்ட்
1997 இல் வெளியான ஆஸ்டிராய்ட், பிராட்ஃபோர்ட் மே இயக்கிய ஒரு சையன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் ஆகும். பூமியை நெருங்கி வரும் ஒரு விண்கல் கண்டுபிடிக்கப்பட்டு, வரவிருக்கும் அழிவை நிறுத்துவதற்கான திட்டத்தை அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் பற்றிய கதையாகும்.படத்தில் மைக்கேல் பீஹன், அன்னாபெல்லா சியோரா மற்றும் சாக் சார்லஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
4.ஜட்ஜ்மென்ட் டே
ஜான் டெர்லெஸ்கி இயக்கிய ஜட்ஜ்மென்ட் டே, மிகப்பெரிய ஹிட்டடித்த அறிவியல் புனைவு படங்களில் ஒன்று. ஒரு வினோதமான தலைவராக மரியோ வான் பீபிள்ஸ், பூமியை நோக்கி வரும் ஒரு பெரிய விண்கல் மோதுவதைத் தடுக்கக்கூடிய ஒரே நபராக நடித்துள்ளார்.
5.மீட்டியோர்
1979 ஆம் ஆண்டு, இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ரொனால்ட் நீம் உருவாக்கினார். பூமி கிரகத்தை நெருங்கும் ஒரு பெரிய விண்கல்லை அழிக்க அமெரிக்கா USSR படைகளுடன் இணைந்து எவ்வாறு செயல்பட்டு வெற்றி பெறுகிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை.இப்படத்தில் சீன் கானரி, நடாலி வுட் மற்றும் கார்ல் மால்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.
6.டோன்ட் லுக் அப்
மெரில் ஸ்ட்ரீப், லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஜெனிஃபர் லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் டோன்ட் லுக் அப். மிகவும் கொடிய உள்வரும் வால் நட்சத்திரத்தால் ஏற்படக்கூடிய தீவிரமான காலநிலை மாற்றம் உள்ளிட்ட மனிதர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான பிரச்சினைகளை இப்படம் காண்பித்துள்ளது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asteroid