உலகெங்கிலும் உள்ள வேலை செய்யும் இடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தலின் அளவை ஐ.நா சர்வதேச தொழிலாளர் அமைப்பு , லாயிட்ஸ் பதிவு அறக்கட்டளை மற்றும் கேலப் நிறுவனம் இணைந்து ஆய்வு செய்துள்ளது. அதில் பணியிட துஷ்பிரயோகம், குறிப்பாக இளைஞர்கள், புலம்பெயர்ந்தோர், பெண்கள் மத்தியில் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது
ஐநாவின் அறிக்கையின் படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 121 நாடுகளில் உள்ள 75,000 தொழிலாளர்களில் 22% க்கும் அதிகமானோர் ஏதோ ஒரு வகையான வன்முறை அல்லது துன்புறுத்தலை அனுபவித்ததாக அறிவித்துள்ளனர்.
வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். பணியாளர்களிடையே உடல் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு அது வேலையின் தரத்தையும் அளவையும் பாதிக்கும்.
தொற்றுநோய் காலத்தில் வேகமாக முதுமையடைந்துள்ள சிறுவர்கள் மூளை- ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
தரவுகளின்படி, வேலை செய்யும் இடங்களில் வன்முறை அல்லது துன்புறுத்தலை அனுபவித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களை துன்புறுத்தல்களை அனுபவித்ததாக தெரிகிறது. மேலும் 6.3% பேர் உடல், உளவியல் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல் ஆகிய மூன்று வடிவங்களையும் எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர்.
கணக்கெடுக்கப்பட்டவர்களில் 8.5% பேர் உடல் ரீதியான வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவிப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் பெண்களை விட ஆண்கள் அதிகமாக இருப்பதாகவும், 6.3% பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவித்ததாகவும், அறிக்கை கூறுகிறது.
பாலினம், இயலாமை நிலை, தேசியம், இனம், தோல் நிறம் அல்லது மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் பாகுபாட்டை அனுபவித்தவர்கள். அத்தகைய பாகுபாட்டை எதிர்கொள்ளாதவர்களை விட வேலையில் வன்முறை அல்லது துன்புறுத்தலை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
இதையும் படிங்க : ஆமை வடிவில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் நகரம்.. ரூ.65000 கோடி செலவில் பிரமாண்டமான வடிவமைப்பு
முடிவுகள் மேலும் ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பணியாளர்களின் உழைப்பையும் வேலை அளவையும் வைத்தே நாடுகளின் செழிப்பும் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் உள்ளது எனவே அவர்களின் வேலை செய்யும் இடத்தின் பாதுகாப்பை கம்பெனிகளும், நாடுகளின் அரசாங்கமும் உறுதி செய்ய வேண்டும். வேலையிடத்தில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை தடுக்கும் சட்டம், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்க உதவும் என்று ஐநா அடங்கிய ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sexual harassment, United Nation, Verbally harrased, Work Place