ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆபீசுக்கு வந்தால் வேலை, முடியாது என்றால் வேறு வேலை பார்க்கவும் - எலான் மஸ்க் அதிரடி

ஆபீசுக்கு வந்தால் வேலை, முடியாது என்றால் வேறு வேலை பார்க்கவும் - எலான் மஸ்க் அதிரடி

ஊழியர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவு

ஊழியர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவு

Elon Musk - ஒவ்வொரு ஊழியர்களும் வாரத்திற்கு குறைந்தது 40 மணிநேரமாவது அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  உலகின் நம்பர் 1 பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் சிஇஓ எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

  கோவிட் பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்து வேலை செய்யும் புதிய மாடலை ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தின. தற்போது உலகம் முழுவதும் பெருந்தொற்று தனிந்துள்ள சூழலில், பல்வேறு நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், வீட்டிலிருந்து பணிபுரிவதை வழக்கமாகக் கொண்ட ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்தில் வந்து வேலைப்பார்க்க  தயக்கம் காட்டுகின்றனர்.

  சிலர் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க விருப்பமில்லை என வேலையை ராஜினமா கூட செய்துள்ளனர். ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களே இந்த சிக்கலை சந்தித்து வரும் நிலையில், எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு கறாரான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

  தனது ஊழியர்கள் அனைவருக்கும் இமெயில் மூலமாக இந்த உத்தரவை அவர் அனுப்பியுள்ளார். அதில், வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்புபவர்கள் அலுவலகத்திற்கு வந்து பணி புரிவது கட்டாயம். ஒவ்வொரு ஊழியர்களும் வாரத்திற்கு குறைந்தது 40 மணிநேரமாவது அலுவலகத்தில் வேலை பார்க்க வேண்டும். எனவே வீட்டில் இருந்து மட்டுமே வேவை பார்ப்பதை இனி ஏற்க முடியாது. இதை ஏற்காதவர்கள் வேறு பார்த்துக்கொள்ளலாம். இதில் மாற்றம் என்பதற்கே இடமில்லை என்றுள்ளார் அதிரடியாக.

  யாருக்கேனும் இதில் விதி விலக்காக மாற்றம் தேவைப்படும் பட்சத்தில் அதை நானே நேரடியாக ஆராய்ந்த பின்னரே ஒப்புதல் வழங்குவேன் என அவர் கூறியுள்ளார். இந்த இமெயில் தகவல் ட்விட்டரில் கசிந்த நிலையில், இந்த மெயில் உத்தரவு உண்மைதான் என எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.

  இதையும் படிங்க: 492 அடி உயரத்தில் தொங்கும் பிரம்மாண்ட கண்ணாடி பாலத்திற்கு கின்னஸ் அங்கீகாரம்

  சில நாள்களுக்கு முன்னர் எலான் மஸ்க் தனது பேட்டி ஒன்றில், சீனர்களையும் அமெரிக்கர்களையும் ஒப்பிட்டு பேசி சீனர்களின் வேலை திறனை புகழ்ந்து பாராட்டியுள்ளார். சீனர்கள் சிறந்த திறமையும், கடும் உழைப்பையும் கொண்ட மக்கள். உற்பத்தி துறையில் அவர்களின் செயல்பாடு மிகச் சிறப்பானது. அவர்கள் தொழிற்சாலையில் வந்து ஆர்வத்துடன் வேலை பார்க்கும் நிலையில், அமெரிக்கர்கள் வேலைக்கு செல்வதையே விரும்புவதில்லை என்று விமர்சித்துள்ளார் எலான் மஸ்க்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Elon Musk, Work From Home