2018-ன் பாப்புலர் வார்த்தை என்ன தெரியுமா? கேம்ப்ரிட்ஜ் அகராதி வெளியீடு!

நோமோஃபோபியா ’nomophobia' என்ற வார்த்தையானது 2018-ம் ஆண்டின் பாப்புலர் வார்த்தையாக கேம்ப்ரிட்ஜ் அகராதி அறிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: December 1, 2018, 11:49 AM IST
2018-ன் பாப்புலர் வார்த்தை என்ன தெரியுமா? கேம்ப்ரிட்ஜ் அகராதி வெளியீடு!
நோமோஃபோபியா ’nomophobia' என்ற வார்த்தையானது 2018-ம் ஆண்டின் பாப்புலர் வார்த்தையாக கேம்ப்ரிட்ஜ் அகராதி அறிவித்துள்ளது.
Web Desk | news18
Updated: December 1, 2018, 11:49 AM IST
2018-ம் ஆண்டில் அதிகம் பிரபலமான வார்த்தையை கேம்ப்ரிட்ஜ் அகராதி வெளியிட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் புதிதாக அறிமுகமாகும் ஆங்கில வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அதில் அதிக பாப்புலர் ஆகும் வார்த்தையை ஆண்டுக்கான வார்த்தை (word of the year) ஆக கேம்ப்ரிட்ஜ் அகராதி அறிவிக்கும்.

கேம்ப்ரிட்ஜ் அகராதி 2019-க்கான ‘word of the year’ ஆக நோமோஃபோபியா ‘nomophobia' என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் ஒரு ஆண்டில் புதிதாக அறிமுகமாகும் வார்த்தைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை ஆக ‘nomophobia' உள்ளது.

மொபைல் போன் இல்லாமலோ அல்லது அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் போது உருவாகும் பயம் தான் ‘nomophobia'.

கேம்ப்ரிட்ஜ் அகராதி தன்னுடைய சர்வதேச பயனாளர்களிடம் நடத்திய கருத்துக்கேட்பின் மூலம் ‘nomophobia'-வை ‘word of the year-2018'ஆக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான வார்த்தைப் போட்டியில் ’gender gap', 'ecocide', 'no platforming' ஆகிய வார்த்தைகளை வீழ்த்தி ‘nomophobia' முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பார்க்க: சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் தராமல் அடாவடி
First published: December 1, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்