Home /News /international /

2,000 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல நாயுடன் அடக்கம் செய்யப்பட்ட குழந்தை.. பிரான்சில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு..

2,000 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல நாயுடன் அடக்கம் செய்யப்பட்ட குழந்தை.. பிரான்சில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு..

பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சவப்பெட்டியில் இறுதி சடங்கு செய்ய பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் பெல்ட் காலர் அணிந்த செல்ல நாயுடன் ஒரு வயது குழந்தை அடக்கம் செய்யப்பட்டதாக பிரெஞ்சு தேசிய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் (INRAP) தெரிவித்துள்ளது. 

பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சவப்பெட்டியில் இறுதி சடங்கு செய்ய பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் பெல்ட் காலர் அணிந்த செல்ல நாயுடன் ஒரு வயது குழந்தை அடக்கம் செய்யப்பட்டதாக பிரெஞ்சு தேசிய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் (INRAP) தெரிவித்துள்ளது. 

பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சவப்பெட்டியில் இறுதி சடங்கு செய்ய பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் பெல்ட் காலர் அணிந்த செல்ல நாயுடன் ஒரு வயது குழந்தை அடக்கம் செய்யப்பட்டதாக பிரெஞ்சு தேசிய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் (INRAP) தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ரோமானிய கால ஐரோப்பாவில் அதாவது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட ஒரு வயது குழந்தை மற்றும் நாயின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சவப்பெட்டியில் இறுதி சடங்கு செய்ய பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் பெல்ட் காலர் அணிந்த செல்ல நாயுடன் ஒரு வயது குழந்தை அடக்கம் செய்யப்பட்டதாக பிரெஞ்சு தேசிய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் (INRAP) தெரிவித்துள்ளது. 

இயற்கையான காரணங்களால் நாய் இறந்துவிட்டதா அல்லது ஒரு வயது குழந்தையுடன் கொல்லப்பட்டதா என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தெரியவில்லை. மத்திய பிரான்சில் உள்ள கிளெர்மான்ட்-ஃபெராண்ட் ஆவெர்க்னே விமான நிலையத்தில் (Clermont-Ferrand Auvergne Airport) 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயது குழந்தையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த கண்டுபிடிப்பை முற்றிலும் விதிவிலக்கானது என்று அவர்கள் கூறுகின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு குழந்தையின் இறுதி சடங்கில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் அந்த சவப்பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு குடும்பத்தார் செய்யும் சடங்கு என சொல்லலாம். அதேசமயம் இறுதி சடங்கில் அந்தக் குழந்தையுடன் ஒரு நாயும் புதைக்கப்பட்டுள்ளது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சவப்பெட்டியில் நாயின் காலர் மற்றும் மணி இருப்பது அசாதாரணமானது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த குழந்தை இறந்தபோது அதற்கு ஒரு வயது இருக்கும் என்றும் ஆனால் அது ஆணா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் உடற்கூறியல் பகுப்பாய்வுகளிலிருந்து குழந்தைகளில் பாலினத்தை தீர்மானிப்பதும் சவாலானது. இருப்பினும் INRAP அறிக்கையில் அந்த குழந்தை, ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

குழந்தை மற்றும் நாய் புதைக்கப்பட்ட சவப்பெட்டி அகஸ்டோ-டைபீரியன் காலத்திலிருந்தே அல்லது முதல் மற்றும் இரண்டாவது ரோமானிய பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்தே இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இயேசுவின் காலத்திற்குப் பிறகு, அகஸ்டஸ் (கிமு 27 முதல் கிபி 14 வரை) மற்றும் திபெரியஸ் (கி.பி 14 முதல் கி.பி 37 வரை ) ஆகியோர் ஆட்சி செய்தபோது குழந்தை வாழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் மர சவப்பெட்டி சிறியதாக இருந்தது. வெறும் 2.6 அடி (80 சென்டிமீட்டர்) நீளம் கொண்டது. 

அதன் மரம் வெகு காலத்திற்கு முன்பே சிதைந்திருந்தாலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அலங்கார இரும்புக் குறி மற்றும் நகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சவப்பெட்டியை கெட்டுப்போகாமல் வைத்திருந்தன. சவப்பெட்டி ஒரு பெரிய குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அந்த காலத்தில் அடக்கம் செய்யும் போது இறைச்சிகளை அதனுடன் வைப்பது வழக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் குழந்தையின் சவப்பெட்டியில் அரை பன்றி இறைச்சி மற்றும் இரண்டு தலையில்லாத கோழிகள் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மினியேச்சர் குவளைகள் மற்றும் இரண்டு கண்ணாடி பானைகளையும் இந்த குழு கண்டுபிடித்தது. அதில் எண்ணெய்கள் அல்லது மருத்துவ தயாரிப்புகளை வைத்திருந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கலைப்பொருட்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்யும் வரை இதுகுறித்து நிச்சயமாகத் தெரியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Published by:Ram Sankar
First published:

Tags: Archeological site, Bone, Child, Dog, France

அடுத்த செய்தி