Home /News /international /

இன்டெர்வியூவில் பெண்ணிடம் வயதை கேட்டதால் ரூ. 3 லட்சம் இழப்பீடு.. டோமினோஸ் நிறுவனத்துக்கு உத்தரவு!

இன்டெர்வியூவில் பெண்ணிடம் வயதை கேட்டதால் ரூ. 3 லட்சம் இழப்பீடு.. டோமினோஸ் நிறுவனத்துக்கு உத்தரவு!

டாமினோஸ் மீது வழக்கு தொடர்ந்த பெண்!

டாமினோஸ் மீது வழக்கு தொடர்ந்த பெண்!

டோமினோஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • internation, IndiaIrelandIreland
    வடக்கு அயர்லாந்தில் உள்ள ஜானிஸ் வால்ஷ் என்கிற பெண் ஒருவர், டோமினோஸ் நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளார். அப்போது தனது வயது மற்றும் பாலினம் ரீதியாக பாகுபாட்டை எதிர்கொண்டதாக டோமினோஸ் பீட்சா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார்.

    ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனமான டோமினோஸ் இதற்கு மன்னிப்புக் கேட்டு அப்பெண்ணிற்கு 4,000 பவுண்டுகள் (சுமார் ரூ. 3 லட்சம்) இழப்பீடு கொடுத்துள்ளது.

    ஜானிஸ் வால்ஷ் என்பவர் ஸ்ட்ராபேன் நகரில் உள்ள, கவுண்டி டைரோன் கிளையின் டோமினோஸ் பீட்சா நிறுவனத்திற்கு டெலிவரி நபர் வேலைக்கான நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார்.

    அவருக்கு அந்த நேர்காணலில் ​​முதல் கேள்வியாக அவரது வயது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கேள்விக்குப் பதிலளித்த பிறகு, நேர்காணல் செய்பவர் தனது வயதை சுட்டிக்காட்டி, "உங்களைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை" என்று கூறியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்தச் செய்தியை முதன்முதலில் அவர் கேட்டபோது, ​​தன் வயதும் பாலினமும் தான் நிராகரிப்பிற்குக் காரணம் என்று வால்ஷ் உறுதியாக இருந்தார். "நான் உடனடியாக நேர்காணல் மற்றும் என் வயது பற்றிய கேள்வியை மீண்டும் நினைத்து பார்த்தேன். எனது வயது ஒரு பிரச்சினையாக இருந்ததாகவும், நேர்காணல் குழு எடுத்த முடிவை அது பாதித்ததாகவும் நம்புகிறேன்" என்று வால்ஷ் தெரிவித்தார்.

    வால்ஷ் தான் எதிர்கொண்ட பாகுபாடுகளைப் பற்றி பேஸ்புக்கில் எழுதியுள்ளார். இவரின் புகாருக்கு ஏற்ப அந்த நேர்காணல் குழு அவரிடம் மன்னிப்பு கேட்டது மற்றும் நேர்காணலில் ஒருவரின் வயதைப் பற்றி கேட்பது முறையற்றது என்று நேர்காணல் செய்பவருக்குத் தெரியாது என்றும் கூறியது.

    வால்ஷ் தான் பெண் என்ற காரணமாக ஓட்டுநராக தேர்வு செய்யப்படாததாகக் கூறியுள்ளார். “ஆண்கள் ஓட்டுநர்களாகப் பணிபுரிவதை நான் எப்பொழுதும் பார்த்திருக்கிறேன், நான் ஒரு பெண் என்பதால் அதற்கு நான் ஏற்றவர் இல்லை என்று நினைக்கிறேன்", என்று அவர் வேதனையுடன் தெரிவித்து கொண்டார்.

    இந்த பாகுபாடு குறித்து அவர் சட்டத்தின் உதவியை தேர்ந்தெடுத்து, ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். இது வடக்கு அயர்லாந்து ஆணையத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த கமிஷனின் மூத்த அதிகாரியான மேரி கிட்சன் அறிக்கையின்படி, "ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வில் ஈடுபடும் நபர்கள், எப்படி வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களை அணுக வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். மேலும் நேர்காணலின் முடிவுகளில் பாலினம் வயது குறித்த பாகுபாடுகளை கைவிட வேண்டும்." என்று கூறியுள்ளார்.

    இந்தப் பிரச்சனைக்கு பிறகு, தங்களது நேர்காணல் வழிமுறைகளை சரியான முறையில் மேற்கொள்வதென டோமினோஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அதே போன்று அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்யும் விதமாக 3 லட்சம் ரூபாயை இழப்பீடாக தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Gender equality, Gender Inequality

    அடுத்த செய்தி