எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே சர்ச்சை மேல் சர்ச்சை தான். எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் குவிந்துகொண்டே இருக்கிறது.
மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதன் 7500 பணியாளர்களில் இருந்து கிட்ட தட்ட பாதி ஊழியர்களாக - 4000 பேரை வேலையை விட்டு தூக்கினார். சிலர் தானாகவே வெளியேறினர். அவர் வெளியேற்றிய நபர்களில் பாலின பாகுபாடு பார்த்ததாக புதிய குற்றச்சாட்டு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ ஃபெடரல் நீதிமன்றத்தில், ட்விட்டரின் முன்னாள் ஊழியர்களான கரோலினா பெர்னல் ஸ்டிரிப்லிங் மற்றும் வில்லோ ரென் துர்கல் ஆகியோர் தங்கள் சார்பாகவும் நாடு முழுவதும் உள்ள மற்ற பெண் ட்விட்டர் ஊழியர்களின் சார்பாகவும் ஒரு வழக்குத் தாக்கல் செய்தனர் .
அந்த வழக்கில் அந்த பெண்கள் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றிய ஊழியர்களில் பாலின பாகுபாடு பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பணிநீக்கங்கள் ஆண் ஊழியர்களை விட பெண் ஊழியர்களை அதிக அளவில் பாதித்தது என்று கூறியுள்ளனர். வேலையில் இருந்து அனுப்பப்பட்ட ஊழியர்களில் 47% ஆண் ஊழியர்களுடன் ஒப்பிடும்போது 57% பெண் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : ’அவர்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்’ - உக்ரைன் போர் குறித்து பேசும்போது கண்ணீர் விட்டு அழுத போப்
வழக்கின் படி, பொறியியல் பிரிவு தொடர்பான பணிகளில் இருந்து நீக்கப்பட்ட பணியாளர்களில் இந்த எண்ணிக்கை என்பது அதிகமாகவே உள்ளது. ட்விட்டர் 63% பெண்களை பொறியியல் பணிகளில் இருந்து நீக்கியதுடன் ஒப்பிடும்போது அதே துறையில் நீக்கப்பட்ட ஆண்கள் எண்ணிக்கை 48% ஆக மட்டுமே உள்ளது.
பணியிட பாகுபாட்டிற்கு எதிரான கூட்டாட்சி மற்றும் கலிபோர்னியா மாநில சட்டங்களை எலான் மஸ்க்கின் பணிநீக்கங்கள் மீறுவதாக வழக்கில் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே பணி இடத்திலேயே படுக்கை அறை ஒதுக்கி ஊழியர்களை அலுவலகத்திலேயே தங்கச் சொன்ன நிகழ்வு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இப்போது பணி நீக்கத்தில் ஏற்பட்ட இந்த எண்ணிக்கை மாறுபாடு என்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.