WOMEN DID NOT DOING ANY WORK IN HOME AND TAKE A EXPERIMENT WHATS HAPPEN SRS GHTA
குடும்பத் தலைவி வீட்டு வேலைகள் செய்யவில்லையென்றால் என்ன நடக்கும்? பரிசோதனை செய்து பார்த்த தாய்
வீடு
ஒரு தாய் உண்மையில் அம்மா வீட்டில் இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதைக் கண்டறிய ஒரு பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். எனவே, அவர் சில நாட்களுக்கு வீட்டு வேலையை செய்வதில் இருந்து விலகினார். கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு அவர் சமைப்பது, சலவை செய்வது போன்ற வேலைகளை செய்வதை முற்றிலும் நிறுத்திவிட்டார். பிறகு என்ன நடந்தது என்பதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வீட்டு வேலைகள் என்றாலே தாய் தான் ஹோம் மினிஸ்டர். ஆனால் பெண்கள் வீட்டிற்காக செய்யும் எல்லா வேலைகளும் குடும்ப உறுப்பினர்களால் கவனிக்கப்படாமலே போகிறது. வீட்டை சரியாக பராமரிப்பதில் இருந்து, சமைப்பது, துணிதுவைப்பது, குழந்தைகளை கவனிப்பது, கழிவறைகளை சுத்தம் செய்வது, பாத்திரங்களை சுத்தப்படுத்துவது போன்ற அனைத்து வேலைகளையும் ஒரு பெண் செய்கிறாள். அதுவே, அவள் ஒரு நாளைக்கு வீட்டில் இல்லையென்றால் என்ன நடக்கும் என்று நாம் என்றாவது யோசித்திருக்கிறோமோ? இங்கு ஒரு தாய் உண்மையில் அம்மா வீட்டில் இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதைக் கண்டறிய ஒரு பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். எனவே, அவர் சில நாட்களுக்கு வீட்டு வேலையை செய்வதில் இருந்து விலகினார். கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு அவர் சமைப்பது, சலவை செய்வது போன்ற வேலைகளை செய்வதை முற்றிலும் நிறுத்திவிட்டார். பிறகு என்ன நடந்தது என்பதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Two days ago, I decided to stop doing the dishes. I make all the dinners and I am tired of having to do all the cleaning too. SINCE THEN this pile has appeared and at some point they are going to run out of spoons and cups and plates.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் வீட்டில் உணவுகளை செய்வதை நிறுத்த முடிவு செய்தேன். நான் தினமும் வீட்டில் இரவு உணவுகளை செய்து வருகிறேன். மேலும் வீட்டை சுத்தப்படுத்த எல்லா பணிகளையும் செய்து நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். தினமும் கரண்டிகள், கப்கள், என பாத்திர குவியல்களை கழுவதில் இருந்து நான் ஓய்வெடுக்கப் போகிறேன் ”என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து செய்து போரடித்து போனதை தொடர்ந்து இந்த பரிசோதனையை அவர் மேற்கொண்டுள்ளார். ஆனால், அவருக்கு மேலும் ஒரு பெரிய தலைவலிதான் காத்திருந்தது. கழுவும் தொட்டி முழுவதும் பாத்திரங்கள் மூழ்கி இருந்தன. மற்றும் வீட்டின் அனைத்து இடங்களும் தலைகீழாக புரட்டி போட்டது போல காட்சியளிக்கப்பட்டது. மேலும் உபயோகப்படுத்த ஒரு ஸ்பூன் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
Spoke too soon. Irish has resorted to making tea with the baby’s weaning spoon and it using the emergency cup. pic.twitter.com/BMR6kuXLzs
வீடு முழுவதும் துவைக்க வேண்டிய துணிகள் குப்பை போல குவிந்திருந்தன. மேலும் அவரது மற்றொரு பதிவில் வீட்டில் எந்த ஒரு ஸ்பூனும் இல்லாததால் பேபி ஸ்பூன் வைத்து காபி போடுவது போல் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இப்படி மூன்று நாட்கள் வீட்டில் எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருந்த சமயங்களில், அவரது கணவர் லேசாக சில வேலைகளை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். 3 நாட்கள் முடித்த உடன் மீண்டும் தனது அன்றாட பணிகளை தொடங்க ஆரம்பித்துள்ளார். பெண்கள், தங்கள் குடும்பத்தினர் மீது உள்ள அன்பு காரணமாக அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். காதல் பெண்களை பொறுமையானவர்களாக மாற்றுகிறது. அதுவே அன்பு எங்களை சோர்வடையச் செய்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.