முகப்பு /செய்தி /உலகம் / எய்ட்ஸ் பாதிப்பு: ஹெச்.ஐ.வி. தொற்றில் இருந்து சிகிச்சையே இல்லாமல் குணமடைந்த பெண்!

எய்ட்ஸ் பாதிப்பு: ஹெச்.ஐ.வி. தொற்றில் இருந்து சிகிச்சையே இல்லாமல் குணமடைந்த பெண்!

ஹெச்.ஐ.வி. வைரஸ் தொற்று

ஹெச்.ஐ.வி. வைரஸ் தொற்று

எய்ட்ஸ் நோய் மிகவும் கொடுமையானதாக கருதப்பட்டு வரும் சூழலில் எவ்வித சிகிச்சையும் இன்றி 2வது நபரும் குணமடைந்திருப்பது மருத்துவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

  • Last Updated :

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் ஹெச்.ஐ.வி. வைரஸ் தொற்றில் இருந்து  முழுமையாக குணமடைந்தார். எவ்வித சிகிச்சையும் இல்லாமலே அவர் குணமடைந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எய்ட்ஸ்(Aids-Acquired immune deficiency syndrome) என்பது மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய் ஆகும். ஹெச்.ஐ.வி. (HIV- Human Immunodeficiency Virus) எனப்படும் வைரஸ் தான் எய்ட்ஸ் நோயை ஏற்படுத்துகிறது. முறையற்ற பாலியல் உறவு,  இரத்தம், தாயிடம் குழந்தைக்கு ஆகிய வழிகள் மூலம் ஒருவருக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்படும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோயாக எய்ட்ஸ் உள்ளது.

உலகின் கொடிய நோய்களில் ஒன்றாக எய்ட்ஸ் அறியப்படுகிறது. இந்த நோயில் இருந்து இதுவரை இரண்டு பேர் மட்டுமே குணமடைந்ததாக கூறப்படுகிறது. அதுவும் சிகிச்சை மூலம். இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த  Loreen Willenberg  என்ற பெண் எய்ட்ஸ் தொற்றில் இருந்து எவ்வித சிகிச்சையும் இன்று குணமடைந்தார்.

தற்போது அர்ஜெண்டினாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் எவ்வித சிகிச்சையும் இன்றி  ஹெச்.ஐ.வி. தொற்றில் இருந்து முழுதும் குணமடைந்துள்ளார். Esperanza பகுதியைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு 2013ம் ஆண்டுஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  தற்போது 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஹெச்.ஐ.வி.பாதிப்பு அவரிடம் இருந்து முழுமையாக மறைந்துள்ளது.

இதையும் படிங்க: ‘எப்படி எல்லாமே ஒன்னா இருக்கும்?’- பிறப்பு குறித்து ஆராய்ந்த தோழிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி

இது எப்படி சாத்தியம் என் வியக்கும் மருத்துவர்கள், அப்பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் இயற்கையாகவே அவர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.  அதேவேளையில், ஹெச்.ஐ.வி. வைரஸின் தடயமே இல்லை என்பதை அறிவியலால் திட்டவட்டமாக நிரூபிக்க முடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எய்ட்ஸ் நோய் மிகவும் கொடுமையானதாக கருதப்பட்டு வரும் சூழலில் எவ்வித சிகிச்சையும் இன்றி 2வது நபரும் குணமடைந்திருப்பது மருத்துவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    மேலும் படிங்க: பிரபாகரன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறிய டக்ளஸ் தேவானந்தா

    First published:

    Tags: AIDS, Argentina