• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஷரியா சட்டப்படி பெண்களுக்கு உரிமை, எங்களால் எந்த நாட்டுக்கும் ஆபத்தில்லை - தாலிபான்களின் முதல் பிரஸ்மீட் ஹைலைட்ஸ்!

ஷரியா சட்டப்படி பெண்களுக்கு உரிமை, எங்களால் எந்த நாட்டுக்கும் ஆபத்தில்லை - தாலிபான்களின் முதல் பிரஸ்மீட் ஹைலைட்ஸ்!

Taliban spokesman Zabihullah Mujahid

Taliban spokesman Zabihullah Mujahid

ஷரியா சட்டப்படி பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கும். பெண்கள் மருத்துவத்துறை போன்ற அவசியமான துறைகளில் மட்டும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

  • Share this:
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள், முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கின்றனர். இந்த சந்திப்பில் எதிர்காலத்தில் அவர்களுடைய செயல்பாடு, திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்திருக்கின்றனர்.

ஆக்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டு போருக்கு கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று முடிவு கிடைத்திருக்கிறது. காபுல் நகரை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அதிபராக இருந்த அஷ்ரப் கனி உயிருக்கு பயந்து நாட்டை விட்டே தப்பியோடிவிட்டார்.

தாலிபான்களின் மீதான பயத்தின் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் தங்களால் இயன்ற வகையில் பிற நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். அந்நாட்டில் ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலவி வருகிறது.

Also Read: ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு, 1500 ஸ்டீராய்ட் ஊசிகள் – கொடூர கணவரிடம் பட்ட அவஸ்தைகள்!

தாலிபான்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என அச்சத்துடன் மக்கள் இருந்து வரும் நிலையில் இன்று ஆட்சியை கைப்பற்றிய பின்னர் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித்.

taliban


அவர் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் சண்டை முடிந்தது. காபுல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். போரின் போது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒரு விபத்து தான், உள்நோக்கத்துடன் கூடியது கிடையாது. தாலிபான்கள் அனைவரையும் மன்னித்து விட்டது, முன்னாள் ராணுவ வீரர்கள், வெளிநாட்டு படைகளுக்காக வேலை செய்தவர்கள் என யார் மீதும் எங்களுக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. அவர்களின் வீடுகளை சோதனையிட மாட்டோம்.

Also Read:  பொது மன்னிப்பு வழங்குகிறோம், பணிக்கு திரும்புங்கள் – அரசு ஊழியர்களுக்கு தாலிபான்கள் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நாட்டிற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று இஸ்லாமிய எமிரேட் (ஆப்கானிஸ்தான்) அனைத்து உலக நாடுகளுக்கும் உறுதியளிக்கிறது. அனைத்து மீடியாக்களும் தொடர்ந்து இயங்க வேண்டும். ஆனால் தேச நலனுக்கு எதிராக எதுவும் அதில் இடம்பெறக் கூடாது.

பெண்கள் உரிமை:

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது எந்த சூழ்நிலையிலும் பாகுபாடு காட்டப்பட மாட்டார்கள் என்பதை அவர்களின் ஆட்சியில் புதிய அரசாங்கம் உறுதி செய்யும். ஷரியா சட்டப்படி பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கும். பெண்கள் மருத்துவத்துறை போன்ற அவசியமான துறைகளில் மட்டும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைவரையும் உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தை அமைக்க விரும்புகிறோம். காபுலில் அமைந்திருக்கும் அனைத்து நாட்டின் தூதரகங்களும் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: