பெரு நாட்டின் லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் 36 வயதான ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா. இவர் கடந்த 26-ம் தேதி காரில் உறவினர்களுடன் பயணம் செய்யும்போது அந்த கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. காரில் பயணித்த அனைவருக்கும் காயம் ஏற்பட்டு அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரோசா மற்றும் அவரது உறவினர் என இருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மற்ற உறவினர்கள் படுகாயமடைந்துள்ளதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, ரோசாவின் உறவினர்கள் ரோசா மற்றும் உயிரிழந்த மற்றொரு உறவினருக்கு இறுதிச் சடங்கு செய்யும் நடைமுறையைத் தொடங்கினர். அவர்களது முறைப்படி, சவப்பெட்டியில் வைத்து மண்ணுக்கு அடியில் புதைக்கும் நடைமுறைத் தொடங்கியது. ரோசாவின் உடலை சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டுவந்தனர். அடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியை திறந்தபோது ரோசா திடீரென கண் விழித்துள்ளார்.
மேலும் அந்த சவப்பெட்டியை ரோசா உதைத்துள்ளார். அதனைப் பார்த்து அதிர்ந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொண்டனர். அங்கு விரைந்துவந்த காவல்துறை, சவப்பெட்டியுடன் ரோசாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து, ஆத்திரமடைந்த உறவினர்கள் முதலில் சிகிச்சையளித்த மருத்துவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றாமல் மாநிலக் கல்வி கொள்கை உருவாக்குவதில் பலனில்லை- மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விபத்தில் ரோசா மற்றும் அவரது உறவினர் என இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளது. ஆனால், விபத்தில் படுகாயமடைந்த ரோசா கோமா நிலையில் இருந்துள்ளார். கோமா நிலையில் இருந்த ரோசாவை சரியாக பரிசோதனை செய்யாமல் உயிரிழந்துவிட்டார் என 2வது முறை அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.